மேலும் அறிய

Car Launch In July: மிடில் கிளாசுக்கு செம்ம டைமிங் - ஜுலையில் அறிமுகமாகும் புதிய கார்கள், ரூ.6.5 லட்சத்துகே MPV

Car Launch In July 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜுலை மாதம் அறிமுகமாக உள்ள கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Car Launch In July 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜுலை மாதம்  பல முன்னணி நிறுவனங்களின் சொகுசு கார்கள் அறிமுகமாக உள்ளன.

ஜுலை மாதம் அறிமுகமாகும் கார்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய எஸ்யுவி உள்ளிட்ட கார் மாடல்கள் ஜுலையில் அறிமுகமாக உள்ளன. வெகுஜன சந்தை கார்கள் தொடங்கி சொகுசு கார் மாடல்களும் இதில் அடங்கும். குறிப்பாக மின்சார எம்பிவி, சொகுசு கார்கள், வெகுஜன சந்தைக்கான ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்களும் புதியதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றின் அறிமுக தேதிகளும், எதிர்பார்க்கப்படும் விலை விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

இதையும் படியுங்கள்: Upcoming Hybrid Cars: டீசல், பெட்ரோல் கதை ஓவர்..! ஹைப்ரிட் ஃபீவர் பத்திக்கிச்சு, முறுக்கிட்டு வரும் கார் மாடல்கள்

1. MG M9 

MG செலக்ட் பிரீமியம் டீலர்ஷிப் மூலம் விற்பனை செய்யப்படும் முதல் கார் மாடலாக சைபர்ஸ்டர் இருக்கும் என நிறுவனம் அறிவித்த நிலையில், தற்போது முதல் மாடலாக மின்சார எம்பிவி ஆன M9 சந்தைப்படுத்தப்பட உள்ளது. இந்த காருக்கான முன்பதிவு, ரூ.51 ஆயிரம் என்ற தொகையுடன் கடந்த மே மாதம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஜுலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அறிமுகமாக உள்ள இந்த காரின் விலை, ரூ.65 முதல் ரூ.70 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இதில் இடம்பெற்றுள்ள 90KWh பேட்டரி பேக்கானது முழுமையாக சார்ஜ் செய்தால் 430 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியர் சீட் பேசஞ்சரின் வசதிகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, இரண்டாவது வரிசையில் ஆடம்பரமான கேப்டன் இருக்கைகளை பெற்றுள்ளது. அதில் மசாஜ் திறன், நீட்டிக்கப்பட்ட ஓட்டோமன் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

2. BMW 2 சீரிஸ் க்ரான் கூபே

BMW நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை காரான 2 சீரிஸ் க்ரான் கூபேவின், அடுத்த தலைமுறை எடிஷன் ஆனது ஜுலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இரண்டாவது தலைமுறை 2 சீரிஸ் காரானது, மெர்சிடஸ் பென்ஸின் A க்ளாஸ் கார் மாடலுக்கு நேரடி போட்டியாக மாற உள்ளது. இந்த இரண்டு கார்களுமே உள்ளூர் சந்தையில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜுலை இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் அறிமுகமாக உள்ள க்ரான் கூபேவின் விலை ரூ.48 முதல் ரூ.52 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். அதேநேரம், 2 சீரிஸைப் பொறுத்தவரை, இந்தியாவில் எந்த பவர்டிரெய்ன்கள் கிடைக்கும் என்பதை தான் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.  நிச்சயமாக 220 கிரான் கூபேவுடன் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறக்கூடும். ஆனால் BMW இந்தியா 220d-ஐ 2.0 லிட்டர் டீசல் இன்ஜினுடன் கொண்டு வருமா அல்லது 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் உயர் செயல்திறன் கொண்ட M235 xDrive-ஐக் கொண்டுவருமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

3. கியா காரென்ஸ் கிளாவிஸ் EV

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் முதல் மின்சார காராகவும், மலிவு விலை 7 சீட்டர் மின்சார கார் மாடலாகவும் காரென்ஸ் கிளாவிஸ் சந்தைப்படுத்தப்பட உள்ளது. ஜுலை 15ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள கிளாவிஸின் விலை, ரூ.17 முதல் ரூ.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். கிரேட்டாவின் மின்சார எடிஷன் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் தான், கிளாவிஸ் EV உருவாக்கப்படுகிறது. இதில் 42 மற்றும் 51.4KWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் இடம்பெற்உம். ஆனால், கிரேட்டாவை காட்டிலும் கூடுதல் ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசைன் அடிப்படையில் மின்சார எடிஷனுக்கு என சில டச்களை பெற்று இருந்தாலும், இன்ஜின் அடிப்படையிலான கிளாவிஸிலிருந்து பெரிய மாற்றம் எதையும் பெற்றிருக்காது. 

4. ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ரெனால்டின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கைகர் கார் மாடல், ஜுலை மாதத்தின் கடைசி வாரத்தில் சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. புதிய எடிஷனானது ஆச்சரியங்கள் ஏதுமின்றி, புத்துயிர் பெற்ற டிசைன், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் ஆகியவற்றை பெறலாம். அதேநேரம், இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடர உள்ளது. அதன்படி, 1.0 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் அதே மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்ஷன்களை பெற உள்ளது. இதன் விலை ரூ.6.5 லட்சம் முதல் ரூ.11.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

5. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட்:

இந்திய சந்தையில் உள்ள ஒரே சப்-4 மீட்டர் எம்பிவி என்பதால், வெகுஜன சந்தையில் உள்ள மிகவும் தனித்துவமான காராக ட்ரைபர் விளங்குகிறது. எனவே உள்நாட்டு சந்தையில் இந்த 7 சீட்டர் காருக்கு என நேரடி போட்டியாளர்களே இல்லை.  ஆனால், இதன் டாப் எண்ட் வேரியண்ட்கள்  மாருதி சுசுகி எர்டிகா மற்றும் டொயோட்டா ரூமியன் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. கைகர் கார் மாடலை போன்றெ ட்ரைபரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனும் புத்துயிர் பெற்ற டிசைன், மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன், அதே பவர் ட்ரெயின் ஆப்ஷன்களை பெற உள்ளது. இதன் விலை ரூ.6.5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் டிஸ்மிஸ்- அண்ணாமலை கடும் கண்டனம்!
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் டிஸ்மிஸ்- அண்ணாமலை கடும் கண்டனம்!
Gold and silver rate today : அப்பாடா.! இப்பவாவது குறைய மனசு வந்துச்சே.. குறைந்தது தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
அப்பாடா.! இப்பவாவது குறைய மனசு வந்துச்சே.. குறைந்தது தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
பிரதமர் பதவியை காவு வாங்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்? நாட்டின் முதல் இஸ்லாமிய பிரதமர், யார் இந்த ஷபானா மஹ்மூத்?
பிரதமர் பதவியை காவு வாங்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்? நாட்டின் முதல் இஸ்லாமிய பிரதமர், யார் இந்த ஷபானா மஹ்மூத்?
Trump US Election Reforms: வரியை போட்டு தாக்கியாச்சு.! அடுத்த ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; என்ன அறிவிப்புன்னு பாருங்க
வரியை போட்டு தாக்கியாச்சு.! அடுத்த ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; என்ன அறிவிப்புன்னு பாருங்க
ABP Premium

வீடியோ

13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி
EV Velu Inspection |’’ஸ்டாலின் ஐயா வர்றாருஎல்லாம் கரெக்டா இருக்கணும்’’எ.வ.வேலு திடீர் INSPECTION
Police Attack North Indians | ’’டேய்..போடா ***பொழைக்க வந்த நாய் நீ’’ வடமாநிலத்தவரை தாக்கிய போலீஸ்
Pakistan Demand to ICC |
DMDK Premalatha | பேச்சாடா பேசுனீங்க.. காத்தடிக்கும் தேமுதிக Office, விருப்ப மனு பரிதாபங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் டிஸ்மிஸ்- அண்ணாமலை கடும் கண்டனம்!
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் டிஸ்மிஸ்- அண்ணாமலை கடும் கண்டனம்!
Gold and silver rate today : அப்பாடா.! இப்பவாவது குறைய மனசு வந்துச்சே.. குறைந்தது தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
அப்பாடா.! இப்பவாவது குறைய மனசு வந்துச்சே.. குறைந்தது தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
பிரதமர் பதவியை காவு வாங்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்? நாட்டின் முதல் இஸ்லாமிய பிரதமர், யார் இந்த ஷபானா மஹ்மூத்?
பிரதமர் பதவியை காவு வாங்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்? நாட்டின் முதல் இஸ்லாமிய பிரதமர், யார் இந்த ஷபானா மஹ்மூத்?
Trump US Election Reforms: வரியை போட்டு தாக்கியாச்சு.! அடுத்த ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; என்ன அறிவிப்புன்னு பாருங்க
வரியை போட்டு தாக்கியாச்சு.! அடுத்த ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; என்ன அறிவிப்புன்னு பாருங்க
Highest Mileage Cars: விக்டோரிஸ், ஹைரைடர் 28KM, செலெரியோ 26KM உண்மையா? மைலேஜ், விலை விவரங்கள்
Highest Mileage Cars: விக்டோரிஸ், ஹைரைடர் 28KM, செலெரியோ 26KM உண்மையா? மைலேஜ், விலை விவரங்கள்
New Hyundai Creta 3rd Gen: நம்ம க்ரெட்டாவா இது.?! ஆளே மாறிப் போச்சே.! 3-ம் தலைமுறையை களமிறக்கும் ஹுண்டாய்; லாஞ்ச் எப்போது.?
நம்ம க்ரெட்டாவா இது.?! ஆளே மாறிப் போச்சே.! 3-ம் தலைமுறையை களமிறக்கும் ஹுண்டாய்; லாஞ்ச் எப்போது.?
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு கடைசி வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு கடைசி வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
TN Roundup: SIR பணிகள் இன்று நிறைவு, தவெக தீவிரம், அமித் ஷா வருகை, ஜனநாயகன் வழக்கு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: SIR பணிகள் இன்று நிறைவு, தவெக தீவிரம், அமித் ஷா வருகை, ஜனநாயகன் வழக்கு - தமிழகத்தில் இதுவரை
Embed widget