கேரளாவில் மூன்று கார்களை டாடா ஹாரியர் ஈவி கார் விளம்பரத்தை போலவே கடினமான மலைப்பகுதியில் இளைஞர்கள் கொண்டு சென்ற வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டாடா ஹாரியர் விளம்பரம்:
டாடா நிறுவனத்தின் பிரபல எலக்ட்ரிக் காரான டாடா ஹாரியர் ஈவி காரின் வீடியோ சமூக வலைதளங்களில் படுபயங்கர வைரலானது. லாண்ட் ரோவர் காரின் மாதிரியை வைத்து அந்த விளம்பரமானது எடுக்கப்பட்டது. இந்த காரின் சிறப்பே எந்த விதமான கடினமான பாதைகளிலும் பயணிக்கும் என்பதே ஆகும், இதை நிரூபிக்கவே இந்த விளம்பரத்தை வாகமானில் உள்ள எலிஃபண்ட் ராக் பகுதியில் ஹாரியர் EV ஒரு கடினமான நிலப்பரப்பில் ஏறிச் செல்லும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
அதேப்பாணியில் ரீல்ஸ்:
இந்த நிலையில் தான் கேரளவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஹாரியர் விளம்பரத்தில் வருவது போலவே அதே மாதிரியான மலை உச்சியில் மூன்று கார்களை கடினமான அந்த மலை உச்சிக்கு கொண்டு சென்று ரீல்ஸ் ஆக வெளியிட்டுள்ளனர். இந்த ரீல்ஸ் படமாக்கப்பட்ட இடம் உரவாப்பாறை என்கிற மலைப்பகுதியாகும், இது ஹாரியர் விளம்பரம் எடுக்கப்பட்ட இடத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த மூன்று இளைஞர்களும் மூன்று வித்தியாசமான கார்களான டோயோடா இன்னோவா கிரிஸ்டா, மஹிந்திரா XUV300, மாருதி சுசுகி ஆல்டோ ஆகிய கார்களை மலை மீது ஏற்றியுள்ளனர், இந்த மூன்று கார்களும் இந்த மாதிரியான பாதைகளில் பயணிக்க கடினமான பாதைகளில் கொண்டு சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
தற்போது இந்த ரீல்ஸ் தான் இணையத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.
டாடா ஹாரியர் EV சிறப்புகள்:
டாடா மோட்டார்ஸின் புதிய ஹாரியர் EV மாடலில் அறிமுகமாகும் AWD (All-Wheel Drive) மாடல் தற்போது அதிக கவனம் பெறும் மின்சார எஸ்யூவியாக மாறியுள்ளது. குறிப்பாக, இந்த மாடலின் விளம்பரத்தில் முக்கிய பங்கு வகித்தது AWD மாடலாகும், இது உண்மையில் டாடா மோட்டார்ஸின் 4x4 ஆஃப்-ரோடு மரபை மீண்டும் கொண்டு வருவதாகும் – இம்முறை மின்சார வடிவில் வந்துள்ளது
75kWh பெரிய பேட்டரி
டாடா ஹாரியர் EV AWD மாடல் ஒரு 75kWh பேட்டரி பேக்கை தாங்கி வருகிறது. இது இரண்டு மோட்டார் இயக்குகிறது – ஒன்று முன் அச்சிலும், மற்றொன்று பின் அச்சிலும். இதன் மூலம் மொத்தமாக 390bhp பவரும், 504Nm டார்க்கும் வழங்கப்படுகிறது. இது ஒரு மின்சார வாகனமாக இருந்தாலும், சக்திவாய்ந்த ட்ரைவை வழங்குவதால், பாரம்பரிய 4x4 வாகனங்களை ஒத்த அனுபவத்தை வழங்குகிறது.
பல்வேறு டெர்ரைன் மோடுகள் மற்றும் ஆஃப்-ரோடு அசிஸ்ட்
ஹாரியர் EV-வில் மல்டிபிள் டெர்ரைன் மோடுகள் மற்றும் ஆஃப்-ரோடு அசிஸ்ட் அம்சங்கள் உள்ளதால், மழையிலும், மணல் பாதையிலும், குகைகள் மற்றும் குன்றுகளில் கூட சிறந்த ஓட்ட அனுபவத்தை வழங்கும் திறன் பெற்றுள்ளது. இது உண்மையில் ஒரு மின்சார ஆஃப்-ரோடு மாஸ்டர் எனலாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI