Kawasaki Versys-X 300: கவாசகி நிறுவனத்தின் வெர்சிஸ்-X 300 மோட்டார் சைக்கிள் விலை ரூ.3.8 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

வெர்சிஸ்-X 300 மோட்டார் சைக்கிள்:

கவாசகி நிறுவனத்தின் வெர்சிஸ்-X 300 மோட்டார் சைக்கிள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழைய மாடலில் இருந்த அதே இன்ஜின் மற்றும் அம்சங்களை தொடர்வதோடு, புதிய வண்ண விருப்பங்கள் மற்றும் புதிய கிராபிக்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  இதன் விலை ரூ.3.80 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பழைய பிரச்னை.. புதுசா என்ன இருக்கு?

வெர்சிஸ்-X 300 மோட்டார் சைக்கிள் கடந்த 2017ம் ஆண்டு இந்திய சந்தையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் விலை ரூ.4.6 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. அதிகப்படியான விலை காரணமாக விற்பனை சரிந்து இருந்த நிலையில், BS6 எனப்படும் புதிய உமிழ்வு விதிகள் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு வெர்சிஸ்-X 300 மோட்டார் சைக்கிளின் பழைய எடிஷன் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தான் 5 வருடங்களுக்குப் பிறகு, பல்வேறு அப்டேட்களுடன் புதிய எடிஷன் மீண்டும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. 

Continues below advertisement

அதன்படி, புதியதாக கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக கேண்டி லைம் க்ரீன் வண்ணத்தில் மட்டுமே இந்த வாகனம் விற்பனை செய்யப்பட்டது. புதிய உமிழ்வு விதிகளுக்கு உகந்ததாக இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. விலையும் கணிசமாக விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அசெம்ப்ளி செய்யப்படும் என ஆரம்பகட்ட கட்ட தகவல்கள் வெளியானாலும், தற்போது முற்றிலும் வெளிநாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட வாகனமாகவே வெர்சிஸ்-X 300 மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் விவரங்கள்:

புதிய எடிஷனிலும் அதே பழைய, நிஞ்சா 300 பைக்கிலிருந்த 296cc பாரெல்லல் ட்வின், லிக்விட் கூல்ட் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது 40hp மற்றும் 25.7Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன், 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 17 லிட்டர் எரிபொருள் டேங்கை தாங்கி நிற்கும் பேக் போன் ஃப்ரேமில் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 

இதர அம்சங்கள் என்னென்ன?

வாகனத்தின் சஸ்பென்ஷன் 130 மிமீ ட்ராவல் அப்ஃப்ரண்டுடன் கூடிய 41 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 148 மிமீ ட்ராவலுடன் கூடிய மோனோஷாக் மூலம் கையாளப்படுகின்றன. 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. முன்புறத்தில் 19 இன்ச் மற்றும் பின்புறத்தில் 17 இன்ச் கொண்ட ட்யூப்களை உள்ளடக்கிய ஸ்போக்ட் வீல் டயர்களை கொண்டுள்ளது. அம்சங்கள் அடிப்படையில் கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ்  ஆகியவற்றுடன் கூடிய டிஜி- அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரை கொண்டுள்ளது. சிங்கிள் பாட் ஹாலோஜென் லேம்ப், லக்கேஜ் ராக், டால் விண்ட்ஸ்க்ரீன், ஒற்றை ஸ்டெப்பட் சீர், அகலமான உயர்த்தப்பட்ட ஹேண்டில் பார் ஆகிய அம்சங்கள் மூலம், வெர்சிஸ்-X 300 மோட்டார் சைக்கிள் டோரிங் மற்றும் ஆஃப் ரோட் பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது. முன்புறத்தில் பெடல் டிஸ்க் பிரேக் கொண்டுள்ள இந்த வாகனத்தின் மொத்த எடை 185 கிலோ ஆகும். டிஜிட்டல் அம்சங்கள் அளவில் இது பெரிய முன்னேற்றம் காணாதது பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

போட்டியாளர்கள்:

வெர்சிஸ்-X 300 மோட்டார் சைக்கிள் அட்வென்சர் பிரிவில் அறிமுகமாகியுள்ள நிலையில், அங்கு ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450 மற்றும் கேடிஎம் 390 ஆகியவை வலுவாக விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஹிமாலயனின் விலை ரூ.2.85 லட்சத்திலிருந்து ரூ.2.98 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கேடிஎம் 390 அட்வென்சரின் ரூ.3.68 லட்சத்தை காட்டிலும், வெர்சிஸ்-X 300 மோட்டார் சைக்கிள் விலை ரூ.12 ஆயிரம் ரூபாய் அதிகமாக உள்ளது. கேடிஎம் வாகனம் பல அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கையில், வெர்சிஸ்-X 300 மோட்டார் சைக்கிள் கூடுதல் சிலிண்டருடன் தனித்து நிற்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI