இந்தியாவில் பல பைக் நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்தில் பல தள்ளுபடிகளை வழங்கி வருகின்றது. இதில் கவாசாகி நிறுவனமும் தனது பைக்குகளுக்கு நிறைய டிஸ்கவுண்ட்களை வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் தற்போது நிஞ்சா 500 பைக்கிற்கான ஆஃப்ரையும் அறிவித்துள்ள நிலையில் அதன் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
நிஞ்சா 500;
கவாசாகி நிறுவனத்தின் நிஞ்சா 500 இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லாஞ்ச் செய்யப்பட்டது. அதன் முந்தைய மாடலான நிஞ்சா 400-ஐ விட 5000 ரூபாய் அதிகமாக விற்பனைக்கு வந்தது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது வண்டியின் இன் ஜின் அப்டேட், ஸ்டைல் மற்றும் வண்டி செயல்திறன்களுக்காக விலையானது நிர்ணயிக்கப்பட்டது.
சக்திவாய்ந்த எஞ்சின்
நிஞ்ஜா 500-இன் இதயம் 451cc பாரலல்-ட்வின் எஞ்சின். இது 44.77 bhp பவர் மற்றும் 42.6 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. அதனுடன் ஆறு வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளதால், நகர சாலையிலும், நீண்ட தூர பயணங்களிலும் மிகச்சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும்.
மேம்பட்ட வடிவமைப்பு
பைக்கின் எடையை 171 கிலோவாக வைத்திருப்பது ரைடர்களுக்கு எளிதான கட்டுப்பாட்டை வழங்குகிறது. ஸ்டீல் ட்ரெலிஸ் ஃப்ரேம், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க், பின்புறத்தில் ப்ரீலோடு-அட்ஜஸ்டபிள் மோனோஷாக் ஆகியவை இணைந்து சிறந்த ஹாண்ட்லிங்கை உறுதி செய்கின்றன.
பாதுகாப்பு & தொழில்நுட்பம்
பிரேக்கிங் வசதிக்காக முன்புறத்தில் 310mm டிஸ்க், பின்புறத்தில் 220mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எல்சிடி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, எல்இடி ஹெட்லைட் மற்றும் டெய்ல்லைட் ஆகிய அம்சங்கள் நிஞ்ஜா 500-க்கு நவீன தன்மையை கூட்டுகின்றன.
விலை & போட்டி
இந்திய சந்தையில் நிஞ்ஜா 500-ன் விலை ₹5.5 லட்சம் – ₹6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விற்பனையாகி வருகிறது. இது ஹோண்டா CBR500R, KTM RC 390, அப்பிரில்லியா RS 457 போன்ற பைக்குகளுடன் இது போட்டியிடும்.
எவ்வளவு டிஸ்கவுண்ட்?
கவாசாகியின் நிஞ்சா 500, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான மாடல்களில் ரூ 47,000 மற்றும் 45,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த டிஸ்கவுண்டானது Cash Back Voucher மூலமாகவே அந்தந்த ஷோரூம்களில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாய்ப்பு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI