June 2026 Car Sale: டாடா நிறுவனம் ஜுன் மாதத்தில் இதுவரை இல்லாத விற்பனையை பதிவு செய்துள்ள நிலையில், ஹுண்டாய் நிறுவனம் 10 சதவிகிதம் சரிவை கண்டுள்ளது.

Continues below advertisement

ஜுன் மாத கார் விற்பனை:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார்களின் விற்பனையானது தொடர்ந்து நேர்மறையான பாதையில் பயணித்து வருகிறது. கடந்த ஜுன் மாதத்தில்  பல்வேறு வாகன உற்பத்தியாளர்களும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் கண்டு இருந்தாலும், மாதாந்திர விற்பனையில் சற்றே பின்னடைவை சந்தித்துள்ளனர். உள்நாட்டு விற்பனையில் இந்தோ-ஜப்பான் நிறுவனமான மாருதி சுசூகி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அதேநேரம், மஹிந்த்ரா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி மற்றொரு உள்ளூர் கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஹுண்டாய் மற்றும் டொயோட்டா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

Continues below advertisement

முன்னணி ப்ராண்ட்களின் ஜுன் மாத விற்பனை:

கார் ப்ராண்ட்
 
ஜுன் 2026 விற்பனை
மே 2026 விற்பனை
மாதாந்திர வித்தியாசம் (%)
ஜூன் 2025 விற்பனை
ஆண்டுக்கு ஆண்டு வித்தியாசம் (%)
மாருதி சுசூகி
 
1,47,187
1,90,337
-22.67
1,18,906
23.78
டாடா மோட்டார்ஸ்
 
62,076
59,090
5.05
37,083
67.40
மஹிந்திரா
 
60,393
58,021
4.09
47,306
27.66
ஹூண்டாய்
 
39,635
47,837
-17.15
44,024
-9.97
டொயோட்டா
 
28,441
30,574
-6.98
26,453
7.52
கியா
 
24,552
27,586
-11.00
20,625
19.04
எம்ஜி மோட்டார்
 
7,568
6,048
25.13
5,829
29.83
ரெனால்ட்
 
4,063
4,113
-1.22
2,625
54.78
நிசான்
 
3,006
2,948
1.97
2,107
42.67

மாருதியின் ஆதிக்கம்..

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளர் என்ற நிலையை ஜுன் மாதத்திலும் மாருதி சுசூகி நிறுவனம் தக்கவைத்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் உள்ளூரில் மட்டுமே ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 187 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இது இரண்டாவது இடத்தை பிடித்துள்ள டாடா மோட்டார்ஸின் விற்பனையை காட்டிலும் இரண்டு மடங்காகும். ப்ரேஸ்ஸா, ஃப்ராங்க்ஸ், க்ராண்ட் விட்டாரா, எர்டிகா, XL6, ஜிம்னி, இன்விக்டோ, விக்டோரிஸ் மற்றும் இ -விட்டாரா ஆகிய யூட்டிலிட்டி வாகனங்கள் மட்டும் 61 ஆயிரத்து 726 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. சிறிய கார்கள் பிரிவில் ஆல்டோ, எஸ்-ப்ரெஸ்ஸோ, பலேனோ, செலேரியோ, டிசையர், ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் மாடல்களில் 75 ஆயிரத்து 231 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அதேநேரம் மே மாதத்துடன் ஒப்பிட்டால் ப்ராண்டின் விற்பனையில் சுமார் 43 ஆயிரம் யூனிட்கள் சரிந்துள்ளன.

டாடாவின் கம்பேக்..

உள்ளூர் சந்தையில் பயணிகள் வாகன விற்பனைக்கான ஜுன் மாத பட்டியலில் டாடா நிறுவனம் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது. அதன்படி கடந்த மாதம் 62 ஆயிரத்து 76 யூனிட்களை விற்பனை செய்து ஆயிரத்து 683 யூனிட்கள் வித்தியாசத்தில் மஹிந்த்ராவை பின்னுக்கு தள்ளியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே விற்பனை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில் இரண்டு உள்ளூர் வாகன உற்பத்தி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த மாதம் டாடா நிறுவனம் தனது புதிய சியாரா மின்சார எடிஷனை அறிமுகப்படுத்திய நிலையில், போர்ட்ஃபோலியோ முழுமைக்கும் ஜுலை 1ம் தேதி முதல் 1.5 சதவிகித விலை உயர்வையும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சறுக்கிய மஹிந்த்ரா

டாடாவுடன் உள்ளூர் விற்பனையில் கடுமையாக போட்டியிட்டு வரும் மஹிந்த்ரா, கடந்த ஜுன் மாதத்தில் 60 ஆயிரத்து 393 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ப்ராண்டின் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவும் தொடர்ச்சியான டிமேண்டை எதிர்கொள்கிறது. இதில் ஸ்கார்ப்பியோ - N, தார், XUV - 3XO மற்றும் XUV 7XO ஆகிய மாடல்கள் அடங்கும். கடந்த மே மாதத்துடன் ஒப்பிட்டால் சுமார் 2 ஆயிரம் யூனிட்கள் ப்ராண்ட் சார்பில் அதிகம் விற்பனையாகியுள்ளன. 

இதையும் படியுங்கள்: Upcoming Hyundai SUVs: பஞ்ச் EV, விக்டோரிஸ்க்கு சவால்..! ஹுண்டாயின் 4 புதிய எஸ்யுவிக்கள், 7 சீட்டர் ஹைப்ரிட் கூட

ஹுண்டாய்க்கு என்ன ஆச்சு?

ஜூன் மாதத்தில் 39,635 யூனிட்டுகளை விற்பனை செய்த ஹூண்டாய் நிறுவனம் ,கடந்த மே மாதத்தை காட்டிலும் 17.5 சதவிகித சரிவை கண்டுள்ளது. தனது விநியோகஸ்தர்களில் ஒருவரின் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டதாகவும், அதன் விளைவாக அந்த மாதத்தில் சுமார் 13,900 யூனிட்டுகள் இழப்பு ஏற்பட்டதாகவும் தென்கொரிய நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ப்ராண்ட் விற்பனையில் க்ரேட்டா , வென்யு மற்றும் எக்ஸ்டர் மாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. க்ராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஐ20 போன்ற அதன் ஹேட்ச்பேக் கார்களுக்கான நிலையான தேவையும் நிலவுகிறது.

டொயோட்டா & கியா நிலவரம்:

டொயோட்டா நிறுவனம் ஜுன் மாதத்தில் உள்நாட்டு சந்தையில் 28,441 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இன்னோவா ஹைக்ராஸ் , அர்பன் குரூஸர் ஹைரைடர் மற்றும் க்ளான்ஸா ஆகியவை ப்ராண்டின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளன.  டொயோட்டா நிறுவனம் தனது ஒன்பதாம் தலைமுறை ஹிலக்ஸ் பிக்கப் வாகனத்தை இந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ள கியா நிறுவனம் ஜுன் மாதத்தில் உள்நாட்டில் 24,552 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. செல்டோஸ் மற்றும் சோனெட் மாடல்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் , கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் சைரோஸ் மாடல்களும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனைக்கு பங்களித்தன. இந்த மாதத்தில், கியா நிறுவனம் தனது கேரன்ஸ் க்ளாவிஸ் EV காருக்கான 'பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ்' (BaaS) திட்டத்தை அறிமுகப்படுத்தியது 


Car loan Information:

Calculate Car Loan EMI