இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓலா, ஏதர் நிறுவனங்களுக்குப் போட்டியாக பல நிறுவனங்களும் உள்ள நிலையில், Joy நிறுவனம் முக்கியமான நிறுவனம் ஆகும்.

Continues below advertisement

விலை:

ஜாய் நிறுவனத்தின் Joy e-bike Gen Nxt இ ஸ்கூட்டர் பற்றி கீழே விரிவாக காணலாம்.

இந்த Joy e-bike Gen Nxt இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 60 ஆயிரத்து 267. இந்த இ ஸ்கூட்டரில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது.

Continues below advertisement

1. Gen Nxt Nanu - ரூபாய் 60 ஆயிரத்து 267

2. Gen Nxt Eco - ரூபாய் 68 ஆயிரத்து 367

3.Gen Nxt Nanu + - ரூபாய் 74 ஆயிரத்து 803

90 கிலோமீட்டர் மைலேஜ்:

இந்த Joy e-bike Gen Nxt இ ஸ்கூட்டரின் விலை பட்ஜெட்டில் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு இது பக்கபலமாக உள்ளது. இதில் 1.86 கிலோவாட் மற்றும் 2.18 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முதல் வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. மற்ற இரண்டு வேரியண்ட்கள் 88 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

கடைசி 2 வேரியண்ட் மட்டும் எகோ, ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் மோட்கள் உள்ளது. 3 வேரியண்ட்களிலும் பேட்டரி போர்ட்டபிள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. கடைசி வேரியண்ட்டில் ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. இது 140 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. கருப்பு, வெள்ளை நிறத்தில் இது உள்ளது.

சிறப்புகள்:

முதல் வேரியண்ட்டில் அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 2வது வேரியண்டில் 46 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். கடைசி வேரியண்டில் 55 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது.

பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் டைப் ஆகும். பேட்டரி ஸ்டேட்டஸ் ஸ்டாண்டர்ட் ஆகும். முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்:

முன்பக்கம் 10 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 10 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் டைப் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் அட்ஜஸ்ட் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனம் 70 கிலோ மட்டுமே எடை கொண்டது. 3 வருடம் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் டிஸ்ப்ளே வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. ஓடோமீட்டர் அனலோக் வசதி உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது.

சிறப்பம்சங்கள்:

லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது.  யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஆன்டி தெஃப்ட் சிஸ்ட்ம் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. டூயல் எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. பகலிலே எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சிக்னல் விளக்குகள்  எல்இடி-யில் பொருத்தப்பட்டுள்ளது. டிக்கி வசதியும் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI