இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ஜாவா எஸ்டி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் தனது புகழ்பெற்ற ஜாவா 42 மாடலின் புதிய வெர்ஷனான ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் (Jawa 42 All Stars) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.80 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாகக் களமிறங்கியுள்ள இதில் 60-க்கும் மேற்பட்ட முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பண்டிகைக் காலத்தில் ஸ்டைலான குரூஸர் பைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

வடிவமைப்பு

Continues below advertisement


முந்தைய மாடலை விட இது சற்று அகலமான மற்றும் கம்பீரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. அகலமான புதிய ரியர் ஃபெண்டர், 150-செக்‌ஷன் தடிமனான பின்சக்கர டயர், புதிய ட்வின் அப்-ஸ்வெப்ட் எக்ஸாஸ்ட் ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய டிசைனிலான அலாய் வீல்கள், மாற்றியமைக்கப்பட்ட பக்கவாட்டு பேனல்கள் மற்றும் சொகுசான பயணத்திற்காக அதிக குஷனிங் கொண்ட புதிய சீட் ஆகியவை உள்ளன. இது பேட்டில் கிரீன், நெபுலா ப்ளூ, மாஸ் கிரே, ஐவரி மற்றும் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

இன்ஜின் மற்றும் செயல்திறன்


இந்த பைக்கில் 294.72cc சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு DOHC இன்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 27.19 hp பவரையும், 26.3 Nm உச்சகட்ட டார்க்கையும் வெளிப்படுத்தும். இதன் உறுதியான ஃப்ரேம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹேண்ட்லிங், அதிக வேகத்திலும் ரைடர்களுக்குச் சிறப்பான கட்டுப்பாட்டையும், நிலைத்தன்மையையும் தருகிறது.

பாதுகாப்பு வசதிகள்


பாதுகாப்பிற்காக 18 இன்ச் முன் சக்கரம், 17 இன்ச் பின் சக்கரம், முன்புறம் 280 மிமீ டிஸ்க், பின்புறம் 240 மிமீ டிஸ்க் மற்றும் ஸ்டாண்டர்டு டூயல் சேனல் ABS பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. கரடுமுரடான சாலைகளைச் சமாளிக்க முன்புறம் டெலஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் கேஸ்-சார்ஜ்டு ட்வின் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. நீண்ட தூரப் பயணங்களில் பஞ்சர் குறித்த கவலையின்றி தொடர்ச்சியாகப் பயணிக்க டியூப்லெஸ் டயர்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கானது அதன் பாரம்பரிய சத்தத்திற்கும், கரடுமுரடான அனுபவத்திற்கும் பெயர் பெற்றது. ஆனால், கிளாசிக் தோற்றத்துடன் நவீன லிக்விட்-கூல்டு இன்ஜின், அதிக பவர் மற்றும் குறைவான எடை கொண்ட பைக்கை விரும்பும் இளைஞர்களை ஜாவா 42 ஈர்க்கிறது. சிறந்த பில்ட் குவாலிட்டியுடன் வந்துள்ள இந்த பைக், ரூ.1.80 லட்சத்தில் சிறப்பான பிக்கப் மற்றும் ஸ்போர்ட்டியான ரைடிங் அனுபவத்தைத் தேடுபவர்களுக்குக் கிளாசிக் 350-க்கு ஒரு சிறந்த மாற்றாக அமையும்.


Car loan Information:

Calculate Car Loan EMI