மகேந்திரா நிறுவனத்தின் புதிய வரவான ஸ்கார்பியோ-என் எஸ்யூவி காரின் விலை மற்றும் கார் புக்கிங் தேதியை அறிவித்துள்ளது.
முற்றிலும் மாறுபட்டது:
மகேந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளில் விற்பனையில் சக்கைபோடு போட்ட கார்களில் ஸ்கார்பியோவும் ஒன்று. 2002ம் ஆண்டு முதலே ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு மாறுதல்களோடு வெளியாகிவந்த ஸ்கார்பியோவுக்கு, கார் பிரியர்கள் மத்தியில் எப்பொதுமே ஒரு நல்ல வரவேற்பு உண்டு. இந்த நிலையில், ஸ்கார்பியோ-என் என்ற பெயரில் முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கார்களை களமிறக்குகிறது மகேந்திரா நிறுவனம். இந்த காரின் சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், காருக்கான புக்கிங் தொடங்கும் நாள் மற்றும் வேரியண்ட்களின் விலைகளை அறிவித்துள்ளது மகேந்திரா நிறுவனம்.
ஸ்காரிபியோ என் வேரியண்ட்கள்:
ஸ்கார்பியோ என் காரானது 2 வீல் ட்ரைவ் மற்றும் 4 வீல் ட்ரைவ் என்ற இரண்டு ஆப்ஷன்களில் வருகிறது. அதில் 2 வீல் ட்ரைவ் Z2, Z4, Z6, Z8, Z8L ஆகிய வேரியண்ட்களும், 4 வீல் ட்ரைவில் Z4, Z8, Z8L ஆகிய வேரியண்ட்களிலும் வருகின்றன. இந்த கார்களின் விலை 11.99 லட்சம் முதல் 21.45 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பியோ என் Z4 வேரியண்ட் 15.45 லட்சம் ரூபாய்க்கும், டாப் எண்ட் மாடலான ஸ்கார்பியோ என் Z8L 21.45 லட்ச ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப விலையானது இந்த கார்களை முதலில் முன்பதிவு செய்யும் 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்றும், இக்கார்களுக்கான முன்பதிவு ஜூலை 30ம் தேதி முதல் தொடங்கும் என்றும் ஸ்கார்பியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
விலைப் பட்டியல்:
ஸ்கார்பியோ என் காரின் தொடக்க மாடலான Z2 வில் பெட்ரோல் வேரியண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 11.99 லட்சம் ரூபாய் என்றும், டீசல் வேரியண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் விலை 12.49 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் இல்லை.
Z4 மாடலில் பெட்ரோல் வேரியண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 13.49 லட்சம் ரூபாய் என்றும், பெட்ரோல் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் விலை 15.45 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, டீசல் வேரியண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கார் பெட்ரோல் காரின் விலையை விட 50 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 13.99 லட்சம் ரூபாய் என்றும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 15.95 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Z6 மாடலில் டீசல் ஆட்டோமேட்டிக், டீசல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் என்று இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே வருகிறது. மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 14.99 லட்சம் ரூபாய் என்றும், ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 16.95 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Z8 மாடலில் பெட்ரோல் வேரியண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 16.99 லட்சம் ரூபாய் என்றும், பெட்ரோல் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 18.95 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, டீசல் வேரியண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 17.49 லட்சம் ரூபாய் என்றும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் காரின் விலை 19.45 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாப் எண்ட் மாடலின் விலை:
ஸ்கார்பியோ என் காரின் டாப் எண்ட் மாடலான Z8Lல் பெட்ரோல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனானது 18.99 லட்சம் ரூபாய்க்கும், ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 20.95 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, டீசல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 19.49 லட்சம் ரூபாய் என்றும், ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 21.45 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI