இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், வாகனத் துறையின் கவனம் தற்போது சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை நோக்கித் திரும்பியுள்ளது. அதன் அடிப்படையில், புனேவைச் சேர்ந்த வேவ் மொபிலிட்டி (Vayve Mobility) என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனம், வேவ் ஈவா (Vayve Eva) என்ற சோலார் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
சோலார்கார்செயல்படும்விதம்
காரின் மேற்கூரை அல்லது வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள போட்டோவோல்டாயிக் (PV) சோலார் பேனல்கள், சூரிய ஒளியை ஈர்த்து மின்சாரமாக மாற்றி, காரின் ரீசார்ஜபிள் பேட்டரியில் சேமிக்கின்றன. மேகமூட்டமான நேரங்களிலும், இரவிலும் இந்த பேட்டரியில் உள்ள ஆற்றல் காரை இயக்குகிறது.
மேலும், வாகனத்தின் வேகம் குறையும்போது உருவாகும் இயக்க ஆற்றலை சேமிக்கும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது.
கூடுதல்ரேஞ்ச்
இந்தக் கார் முழுமையாக சூரிய ஒளியில் மட்டுமே இயங்காது. இதன் சோலார் ரூஃப் மூலமாக பிரதான பேட்டரிக்குத் தொடர்ந்து ட்ரிக்கிள் சார்ஜ் (trickle-charge) கிடைக்கிறது. இதன் மூலம் தினசரி கூடுதலாக 10 முதல் 12 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நகரங்களுக்குள் தினசரி பயணிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மூன்றுவேரியண்ட்களில் அறிமுகம்
வேவ் ஈவா கார் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 3 வேரியண்ட்களில் வெளிவருகிறது:
- நோவா (Nova): 9 kWh பேட்டரியுடன், ஒரு முழு சார்ஜில் 125 கி.மீ ரேஞ்ச் வழங்கும்.
- ஸ்டெல்லா (Stella): 6 kWh பேட்டரியுடன், 175 கி.மீ ரேஞ்ச் வழங்கும்.
- வேகா (Vega): இது டாப் வேரியண்ட் ஆகும். இதில் உள்ள 18 kWh பேட்டரி மூலம், ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ வரை பயணிக்க முடியும்.
செயல்திறன் மற்றும் சார்ஜிங்
இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 70 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 0 முதல் 40 கி.மீ. வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடும். இதனை 15A ஹோம் சாக்கெட் மூலம் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் செய்து கொள்ளலாம்.
விலைஎப்படி?
பேட்டரி சந்தா முறையில் இதன் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை ரூ.3.25 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரப் பயன்பாட்டிற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த மைக்ரோ காரில் 2 பெரியவர்கள் மற்றும் 1 குழந்தை வசதியாக அமர்ந்து பயணிக்கலாம்.
குறுகிய வீதிகள், அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்க்கிங் இடப்பற்றாக்குறை உள்ள நகர்ப்புறங்களுக்கு இது மிகச் சிறந்த, நீடித்த உழைப்பைத் தரும் வாகனமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI