நாட்டின் முதல் எலக்ட்ரிக் ஃப்ளையிங் டாக்சி, அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் வடிவமைப்பு, ரேஞ்ச்மற்றும்கட்டணவிவரங்கள் என்ன? காணலாம்.
இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பிளையிங் டாக்சியை ஐஐடி சென்னை டிஸ்கவரி வளாகத்தில் தொடங்கப்பட்ட தி இ-பிளேன் கம்பெனி (The ePlane Company) உருவாக்கி வருகிறது. தற்போது இதன் முன்மாதிரி உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. e200X என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டாக்ஸி, நகர்ப்புறப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிளையிங் டாக்சியின் முழுமையான சிறப்பம்சங்கள் என்ன என்று காணலாம்.
வடிவமைப்பு
இது eVTOL எனப்படும் எலெக்ட்ரிக் வெர்டிகல் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 800 வோல்ட் ஹை வோல்டேஜ் எலக்ட்ரிக் பவர்ட்ரெய்ன், சார்ஜிங்கை வேகமாக்குகிறது.
இந்த டாக்ஸியால் ஹெலிகாப்டரைப் போல செங்குத்தாக மேலெழும்பவும், தரையிறங்கவும் முடியும் என்பதால் இதற்கு விமானங்களைப் போல நீண்ட ஓடுபாதை தேவையில்லை. இது பெரு நகரங்களின் நெரிசல் போக்குவரத்தில் சிறப்பான ஒன்றாக இருக்கும்.
செங்குத்தாக மேலே எழும்ப ரோட்டர்களும், முன்னோக்கிப் பறக்க ஏரோடைனமிக் இறக்கைகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வடிவமைப்பு மிகவும் கச்சிதமானது. ஒரு காரை நிறுத்துவதற்குத் தேவையான அளவிலான சிறிய பார்க்கிங் இடமே இதனை நிறுத்தப் போதுமானது.
நவீன கார்பன் ஃபைபர் உபகரணங்களால் தயார் செய்யப்பட்ட இந்த டாக்ஸியின் ஒட்டுமொத்த எடை சுமார் 200 கிலோ மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பயணிகள்எத்தனை பேர் பயணிக்கலாம்?
இந்த எலக்ட்ரிக் பிளையிங் டாக்சியில் மொத்தம் 3 பேர் அமரக்கூடிய இடவசதி உள்ளது. அதாவது, ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் இதில் சௌகரியமாகப் பயணிக்க முடியும்.
ரேஞ்ச்
இதில் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், சுமார் 110 கிலோமீட்டர் தூரம் வரை இடைவிடாமல் பறக்கும் ரேஞ்ச் இதற்கு உண்டு. இது மணிக்கு 160 கி.மீ முதல் அதிகபட்சம் 200 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. இதன் மூலம், சாலையில் ஒரு மணிநேரம் எடுத்துக்கொள்ளும் பயணத்தை வெறும் 10 முதல் 14 நிமிடங்களில் விரைவாகச் சென்றடைய முடியும்.
விலை, பயணக்கட்டணம்
இதன் விலை அல்லது கட்டண விவரம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இந்த வாகனத்திற்கான பேட்டரி சோதனை மற்றும் போக்குவரத்து இயக்குநரகத்தின் ஒப்புதல் பெறும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் இது வர்த்தக ரீதியாக மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.இதற்கு 2027ஆம் ஆண்டு இறுதி வரை ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI