Hyundai Hybrid SUVs: ஹுண்டாய் நிறுவனம் அடுத்தடுத்து அறிமுகப்படுத்த உள்ள 3 ஹைப்ரிட் எஸ்யுவிக்களின் அடிப்படை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹுண்டாயின் ஹைப்ரிட் எஸ்யுவிக்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வலுவாக காலூன்ற திட்டமிட்டுள்ள ஹுண்டாய் நிறுவனம், தனது எஸ்யுவி போர்ட்ஃபோலியோவை விரிவாக்க உள்ளது. அதன் ஒரு அங்கமாக கிரேட்டாவின் அடுத்த தலைமுறை எடிஷனை ஹைப்ரிட் எடிஷனில் அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், 3 வரிசை இருக்கை வசதி கொண்ட பிரீமியம் எஸ்யுவி தயாரிப்பிலும் அந்நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அல்கசார் கார் மாடலுக்கு மேலே நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளதாம். சர்வதேச அளவில் ஹுண்டாய் நிறுவனத்தின் முதன்மையான மாடலாக உள்ள பாலிசேட் காரும், இந்திய சந்தைக்கு ஹைப்ரிட் அமைப்புடன் கொண்டு வரப்படலாம். இந்த மூன்று கார் மாடல்கள் குறித்தும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
1. 7 சீட்டர் ஹுண்டாய் Ni1i SUV
ஹுண்டாய் நிறுவனம் தனது அல்கசார் மற்றும் டக்சன் கார் மாடல்களுக்கு இடையே உள்ள, வெற்றிடத்தை நிரப்பும் வகையில் முற்றிலும் புதிய எஸ்யுவியை வடிவமைப்பதாக கூறப்படுகிறது. இந்த கார் வரும் 2027ம் ஆண்டு சந்தைப்படுத்தப்படலாம் என கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த காரானது மகாராஷ்டிராவில் உள்ள ஹுண்டாய் நிறுனத்தின் ஆலையில் தான் அசெம்பிள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் அடுத்த தலைமுறை வென்யு கார் மாடலை உற்பத்தி செய்வதற்கான பணிகள் அந்த ஆலையில் ஏற்கனவே தொடங்கி தீவிரமாக நடைபெற்உ வருகிறது. திட்டமிட்டபடி, பணிகள் முடிவுற்றால் இந்த ஆலையில் உருவாக்கப்படும் இரண்டாவது எயுவி ஆக Ni1i SUV கார் மாடல் இருக்கும்.
வெளியான தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில், ஹுண்டாயில் தற்போது பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் திருத்தம் செய்யப்பட்டு, ஹைப்ரிட் அமைப்பு புதிய காரில் இடம்பெறலாம். அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களும் வெளியாகாவிட்டாலும், அடுத்த தலைமுறை கிரேட்டா மற்றும் செல்டோஸ் கார் மாடல்களிலும், இதேபோன்ற வலுவான பெட்ரோல் ஹைப்ரிட் அமைப்புகள் இடம்பெறலாம் என ஆட்டோமொபைல் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2. ஹுண்டாயின் அடுத்த தலைமுறை கிரேட்டா
ஹுண்டாய் நிறுவனம் தற்போது முழு வீச்சில் இரண்டாவது தலைமுறை வென்யு கார் மாடலை, நடப்பாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு இணையாக மேலே குறிப்பிட்டபடி, மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட பிரீமியம் எஸ்யுவிக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆழமான தகவல்களை அலசினால், அடுத்த தலைமுறை கிரேட்டா கார் மாடலுக்கான பணிகளும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. SX3 என பெயரிடப்பட்டுள்ள இந்த காரானது, 2027ம் ஆண்டுக்குள் முழுமையான மாற்றத்தை காணக்கூடும். உள்ளேயும், வெளியேயும் பரவலான திருத்தங்களை கொண்டிருக்கக் கூடும். இதனிடையே, அடிப்படை அப்டேட்களுடன், கிரேட்டா மின்சார எடிஷனின் மிட்-லைஃப் அப்டேட்டிற்கான பணிகளையும் ஹுண்டாய் தொடங்கியுள்ளது.
3. ஹுண்டாய் பாலிசேட் ஹைப்ரிட்:
ஹுண்டாயின் புதிய தலைமுறை ஹைபிர்ட் பவர் ட்ரெயின் ஆனது, அந்நிறுவனத்தின் முதன்மையான கார் மாடலான பாலிசேட் எஸ்யுவில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த கார் 2028ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். குறிப்பாக, இந்த கார் உள்ளூர்மயமாக்கப்பட்டு ரூ.50 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படலாம். இது 2.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் எலெக்ட்ரிக் அசிஸ்டன்ஸை கொண்டு, 334 குதிரைகளின் ஆற்றல் மற்றும் 460Nm இழுவை திறனை உற்பத்தி செய்கிறது. பாலிசேட் கார் மாடல் அதிகபட்சமாக லிட்டருக்கு 14 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI