இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். இவர்களது பல்வேறு தயாரிப்புகள் இந்திய சாலைகளில் உலா வருகிறது. இந்த நிலையில், ஹுண்டாய் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான காரான Hyundai Venue காரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே காணலாம்.
Hyundai Venue:
ஹுண்டாய் நிறுவனத்தின் இந்த Hyundai Venue கார் ஒரு காம்பேக்ட் எஸ்யுவி ஆகும். இந்த காரில் 17 இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளது. நல்ல அகலமான கேபின் வசதி உள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளித்தோற்றத்திலும் உட்தோற்றத்திலும் வசீகரமாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை என்ன?
இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 9.43 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 19.53 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 25 வேரியண்ட் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. 998 சிசி திறன் எஞ்ஜின், 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் ஆகிய எஞ்ஜின்களில் பெட்ரோல் கார் உருவாக்கப்பட்டுள்ளது. அதேசமயம், டீசல் கார்களுக்கு 1493 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
மைலேஜ் எப்படி?
பெட்ரோல் கார்கள் அதிகபட்சமாக 18.5 கிலோ மீட்டர் முதல் 20 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. டீசல் கார்கள் 17.9 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் காராகவும் இதில் உள்ளது.
சக்கரங்கள், காரின் உயரம், உள்ளே கேபின் வசதிகள், இருக்கைகள், பின் இருக்கைகள் பயணிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் ஓடும் Hyundai Venue காரில் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 118 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 172 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இந்த காரில் 12.3 இன்ச் வளைவான டிஸ்ப்ளே உள்ளது. இதில் கூகுள் மேப், போன் கால் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளது. நீலம், சிவப்பு, வெள்ளி நிறம் என பல வண்ணங்களில் இந்த கார் உள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்:
இந்த காரில் 6 ஏர்பேக் உள்ளது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது. அதிவேக அலர்ட் எச்சரிக்கையும் உள்ளது. ஏபிஎஸ் வித் இபிடி வசதி உள்ளது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் வசதி உள்ளது. இந்த கார் கியாவின் சோனட், மஹிந்திராவின் எக்ஸ்யூவி 3 எக்ஸ் ஓ கார்களுக்கு போட்டியாக உள்ளது. இந்த காரின் பயனாளர்கள் இந்த காருக்கு 5க்கு 4.7 ஸ்டார் அளித்துள்ளனர்.
Car loan Information:
Calculate Car Loan EMI