Hyundai Cars: i20 முதல் Venue வரை.. ரூ.1.37 லட்சம் ரூபாயை குறைத்த ஹுண்டாய் - எந்த காருக்கு எவ்வளவு மிச்சம்?
ஹுண்டாய் நிறுவனத்தின் முன்னணி கார்கள் ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் எந்தளவு குறைந்துள்ளது? வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு சேமிப்பு? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக ஹுண்டாய் உள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் அனைத்து கார்களின் விலையும் பெருமளவு குறைந்துள்ளது. அந்த வரிசையில் ஹுண்டாய் நிறுவனத்தின் பல கார்களின் விலையும் குறைந்துள்ளது.
ஹுண்டாய் நிறுவனத்தின் எந்த கார் எந்தளவு குறைந்துள்ளது? அதற்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள்? மொத்த சேமிப்பு எவ்வளவு? என்பதை கீழே காணலாம்.
1. Hyundai Venue - ரூ.1.37 லட்சம்
2. Hyundai Exter - ரூ.1.02 லட்சம்
3. Hyundai i20 - ரூ.1.14 லட்சம்
4. Hyundai Grand i10 Nios - ரூ.1.06 லட்சம்
5. Hyundai Aura - ரூ.95 ஆயிரம்
1. Hyundai Venue:
ஹுண்டாய் நிறுவனத்தின் Hyundai Venue கார் ஜிஎஸ்டி விலை குறைப்பால் அதன் தொடக்க விலையில் இருந்து ரூபாய் 67 ஆயிரத்து 719 குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் தள்ளுபடியாக ரூபாய் 70 ஆயிரம் குறைத்துள்ளனர். மொத்த தள்ளுபடியாக ரூபாய் 1 லட்சத்து 37 ஆயிரத்து 719 குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.26 லட்சம் ஆகும்.
2. Hyundai Exter:
ஹுண்டாயின் மற்றொரு வெற்றிகரமான படைப்பு இந்த Hyundai Exter ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 52 ஆயிரத்து 957 குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரம் அளித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 1 லட்சத்து 2 ஆயிரத்து 957 அளித்துள்ளனர். இதன் தொடக்க விலை ரூபாய் 7 லட்சத்து 72 ஆயிரத்து 107 ஆகும்
3. Hyundai i20:
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகியுள்ள கார் Hyundai i20 ஆகும். இந்த கார் ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் ரூபாய் 64 ஆயிரத்து 035 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரூபாய் 50 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக வாடிக்கையாளர் ரூபாய் 1 லட்சத்து 14 ஆயிரத்து 035 சேமிக்கலாம். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.87 லட்சம் ஆகும்.
4. Hyundai Grand i10 Nios:
ஹுண்டாய் நிறுவனத்தின் Hyundai Grand i10 Nios கார் வாடிக்கையார்களால் அதிகம் வாங்கப்படும் காராக உள்ளது. இந்த கார் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 51 ஆயிரத்து 22 குறைந்துள்ளது. மேலும் கூடுதல் தள்ளுபடியாக ரூபாய் 55 ஆயிரம் வரை குறைத்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 1 லட்சத்து 6 ஆயிரத்து 22 விலை குறைந்துள்ளது. இந்த காரின் புதிய தொடக்க விலை ரூபாய் 6.48 லட்சம் ஆகும்.
5. Hyundai Aura:
ஹுண்டாய் நிறுவனத்தின் Hyundai Aura கார் ஜிஎஸ்டி விலை குறைப்பால் ரூபாய் 55 ஆயிரத்து 780 குறைந்துள்ளது. இந்த காருக்கு கூடுதல் தள்ளுபடியாக ரூபாய் 40 ஆயிரம் அறிவித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 95 ஆயிரத்து 780 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் புதிய தொடக்க விலை ரூபாய் 5.98 லட்சம் ஆகும்.





















