Hyundai Ioniq P EV: ஹுண்டாயின் முற்றிலும் புதிய ஐயோனிக் P மின்சார எஸ்யுவியில் என்ன எதிர்பார்க்கலாம் என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

ஹுண்டாய் ஐயோனிக் P மின்சார கார்:

ஹுண்டாய் நிறுவனம் HE1i என்ற கோட்நேமை கொண்ட முற்றிலும் புதிய மாடலுடன், மிகவும் மலிவு விலை மின்சார எஸ்யுவி பிரிவில் நுழையத் தயாராக உள்ளது. இந்த மின்சார வாகனத்தின் அதிகாரப்பூர்வ பெயர், விவரக்குறிப்புகள், அம்சங்கள் மற்றும் பிற விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், இதன் உற்பத்தி எடிஷன் ஹூண்டாய் அயோனிக் பி (Hyundai Ioniq P) என்று அழைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்ஜின் அடிப்படையிலான மாடலை மின்சார வாகனமாக மாற்றிய ஹுண்டாய் க்ரேட்டா எலக்ட்ரிக் (Hyundai Creta Electric) போலல்லாமல், அயோனிக் பி இந்தியாவிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு மின்சார வாகனமாக இருக்கும். இது தமிழ்நாட்டில் உள்ள ஹுண்டாயின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

அயோனிக் பி – போட்டியாளர்கள் & எதிர்பார்க்கப்படும் விலை

அயோனிக் பி காம்பாக்ட் EV, ஜனவரி மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, 2027 பாரத் குளோபல் மொபிலிட்டி எக்ஸ்போவில் இது பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தப்படும். மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. அயோனிக் பி, இந்தியாவில் தென்கொரிய ப்ராண்டின் மிகச்சிறிய மற்றும் மிகவும் மலிவு விலையிலான EV ஆக, க்ரேட்டா மின்சார எடிஷனுக்கு கீழ் நிலைநிறுத்தப்படும். இதன் உத்தேச விலை ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூரில் கியா சைரோஸ் EV, டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்த்ரா XUV 3XO EV ஆகியவற்றுடன் போட்டியிடும்.

Continues below advertisement

இதையும் படியுங்கள்: VinFast VF5: 370KM ரேஞ்ச், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் - மிடில் க்ளாஸ் ஃபேமிலிக்கான பட்ஜெட் மின்சார கார் - முழு விவரம்

ஹுண்டாய் அயோனிக் பி – டிசைன் விவரங்கள்

சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும்போது, ​​புதிய ஹுண்டாய் மின்சார வாகனம் ஒரு பாக்ஸி போன்ற மற்றும் நிமிர்ந்த தோற்றத்தைக் கொண்டிருக்கும் என்பதை உணரமுடிகிறது. இந்த மின்சார வாகனம், ஹுண்டாய் இன்ஸ்டர் மின்சார வாகனம் உட்பட, ஹூண்டாயின் உலகளாவிய மின்சார வாகனங்களிலிருந்து வடிவமைப்பு உத்வேகத்தைப் பெறும். இதன் முன்பக்கத்தில், தட்டையான மற்றும் நிமிர்ந்த மூக்கு, கீழ் பகுதியில் பொருத்தப்பட்ட LED முகப்பு விளக்குகள், பிக்சல் வடிவ LED பகல்நேர விளக்குகள் மற்றும் ஒருங்கிணைந்த காற்று உள்ளீட்டு அமைப்பு மற்றும் பார்க்கிங் சென்சார்களுடன் கூடிய ஸ்போர்ட்டியான பம்பர் ஆகியவை இடம்பெறும்.

மற்ற முக்கிய சிறப்பம்சங்களில், உயரமான ரூஃப் அமைப்பு, கூரையோடு ஒட்டிய கதவுக் கைப்பிடிகள், எடுப்பான ரூஃப் பட்டைகள், பெரிய கண்ணாடிப் பகுதி, ஏரொடைனமிக்ஸ் ரீதியாக மேம்படுத்தப்பட்ட இரட்டை வண்ண அலாய் சக்கரங்கள், குட்டையான முன் மற்றும் பின் நீட்சிகள் மற்றும் பிக்சல் வடிவத்திலான LED பின்விளக்குகள் ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் அயோனிக் பி –  அம்சங்கள்

சோதனை வாகனம், அதன் மையத்தில் அமைந்துள்ள டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றின் ஒரு காட்சியை நமக்குக் காட்டியுள்ளது. இந்தியாவில் ப்ராண்டின் புதிய ப்ளியோஸ் கனெக்ட் இடைமுகத்தைக் கொண்ட முதல் கார்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். இந்த மின்சார வாகனத்தில் பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்ட வசதியுள்ள முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், கனெக்டட் கார் தொழில்நுட்பம், பின்புற ஏசி வென்ட்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பல ஏர்பேக்குகள், லெவல் 2 ADAS மற்றும் பல அம்சங்களும் இடம்பெறலாம்.

ஹுண்டாய் அயோனிக் பி – பேட்டரி மற்றும் ரேஞ்ச்

ஹுண்டாயின் பிரத்யேக E-GMP (K) மின்சார வாகன பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட அயோனிக் பி, ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பத்தில் எக்ஸைட் எனர்ஜியிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பேட்டரி செல்களைப் பெறத் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், விநியோக கால அட்டவணையில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக இந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. மாறாக சீனாவின் ஸ்வோல்ட் நிறுவனத்திடமிருந்து பேட்டரி செல்களை இறக்குமதி செய்கிறது. அதிகாரப்பூர்வ ரேஞ்ச் விவரங்கள், அதன் வெளியீட்டிற்கு நெருங்கிய நேரத்தில் அல்லது அதன் அறிமுகத்தின் போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


Car loan Information:

Calculate Car Loan EMI