Hyundai Ioniq 5: ஹுண்டாயின் ஐயோனிக் 5 மாடலின் முந்தைய எடிஷனில் இருந்த பிரச்னைகளுக்கு, ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் தீர்வுகளை கொண்டுள்ளதா என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஹுண்டாயின் ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட்

இந்திய சந்தையில் கடந்த 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, முதல்முறையாக மிகப்பெரிய அப்டேட்களை பெற்ற ஐயோனிக் 5 மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளூரில் அசெம்பிள் செய்யப்படும் இந்த காரின் விலை 55 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மாடலானது பெரிய பேட்டரி பேக், மேம்படுத்தப்பட்ட வெளிப்புறம், மாற்றப்பட்ட உட்புற இன்டீரியர், புதிய கனெக்டட் தொழில்நுட்பம் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் என, உள்ளூரில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள கவர்வதற்கான ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது.

Continues below advertisement

ஹுண்டாயின் விலை உயர்ந்த காரின் பேட்டரி விவரங்கள்:

இந்திய சந்தையில் ஹுண்டாயின் மிகவும் விலையுயர்ந்த கார் மாடலாக ஐயோனிக் 5 கார் மாடல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் புதிய எடிஷனில் ஒரு முழுமையான சார்ஜில் 690 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கக் கூடியதாக கூறப்படும் 84KWh பேட்டரி பேக் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் ரேஞ்ச் தொடர்பான அச்சம் குறைவதோடு, நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது. மேலும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஹுண்டாயின் அதே எலெக்ட்ரிக் க்ளோபல் மாடுலர் ப்ளாட்ஃபார்மில் தான் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது.

விற்பனையில் சோபிக்காத ஐயோனிக் 5

மின்சார வாகனங்களுக்கான பெரும்பாலான அம்சங்களை கொண்டிருந்தாலும், ஐயோனிக் 5 மாடலால் விற்பனையில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. உள்ளூரில் அறிமுகமான முதல் 11 மாதங்களில் இந்த காரின் ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகின. 45 லட்சம் விலை பிரிவில் இது ஒரு வலுவான விற்பனையாகவே கருதப்பட்டது. 2024ம் ஆண்டில் இந்த விற்பனை எண்ணிக்கையானது பாதியாக குறைந்தது. அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைய, 2026ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஐயோனிக் 5 கார் மாடலில் வெறும் 2 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகும் அளவிற்கு சரிந்துள்ளது. சில நேரங்களில் 10 லட்சம் ரூபாய் வரையிலும் சலுகைகள் அறிவித்தும் கூட, இந்த காரை வாங்க பொதுமக்கள் பெரிய அளவில் பெரிய விருப்பம் காட்டவில்லை.

ஐயோனிக் 5 மாடலின் மீதான நம்பகத்தன்மை பிரச்னை

ஐயோனிக் 5 மாடல் விற்பனையில் கடும் சவால்களை எதிர்கொள்ள,  அதன் மீதான நம்பகத்தன்மையில் உள்ள சிக்கல் முக்கிய காரணமாகும். குறிப்பாக, இண்டக்ரேடட் கண்ட்ரோல் சார்ஜிங் யூனிட்டில் சிக்கல் ஏற்பட்டு, 12V பேட்டரி முழுமையாக தீர்ந்து வாகனங்கள் ஆங்காங்கே சாலையில் நின்றது பயனர்களிடையே மிகப்பெரிய எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோக உதிரிபாகங்களை மாற்றி கொடுப்பதற்கு அதிகப்படியான நேரத்தை எடுத்துக்கொள்வது, மின்சார வாகனங்களுக்கு ப்ராண்ட் தரப்பில் போதுமான சர்வீஸ் பாயிண்ட்கள் இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகளும் இந்த கார் மாடலின் விலற்பனையை கடுமையாக பாதித்தன.

ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்டில் தீர்வுகள் இருக்கா?

பழைய ஐயோனிக் 5 எடிஷனில் இருந்த முக்கிய குறைபாடுகளாக பயனர்கள் குறிப்பிட்ட பலவற்றிற்கு, ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் தீர்வுகளை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி,

  • மழைகாலங்களில் மோசமான பார்வை திறனை குறைக்க ஏதுவாக, காரின் பின்புற விண்ட்ஷீல்டில் வைபர் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
  • AGM பேட்டரிகளைப் பயன்படுத்துவதன் மூலம், 2026 மாடல் முந்தைய 12V பேட்டரி தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய ஹுண்டாய் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
  • முன்னதாக டச்ஸ்க்ரீனில் தேடி எடுக்க வேண்டியதாக இருந்த அடிக்கடி பயன்படுத்தும் ஹீடட் மற்றும் வெண்டிலேடட் போன்ற செய்லபாடுகளுக்கு தற்போது பிஷிகல் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன
  •  புதிய ஐயோனிக் 5 மாடலில் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ அம்சங்களை ஆதரிக்கக் கூடிய கனெக்டட் கார் நேவிகேஷன் காக்பிட் வசதியை கொண்டுள்ளது

ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்டில் - புதிய அம்சங்கள்,  வசதிகள்

ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் புதியதாக புதிய 3 ஸ்போக் லெதர் ஸ்டியரிங்  வீல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஹூண்டாயின் ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொகுப்பில், திருட்டு நடவடிக்கைகளை தவிர்க்க கூடுதலாக பாதுகாப்பிற்காக ரிமோட் இம்மொபிலைசேஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய மாடலில் உள்ள பாதுகாப்பு அப்டேட்களில், பின்புற பார்க்கிங் கொலிசன் தடுப்பு அசிஸ்ட்,  பக்கவாட்டு பார்க்கிங் டிஸ்டன்ஸ் வார்னிங் ஆகியவையும் உள்ளன. இவை இரண்டும் ஏற்கனவே உள்ள ADAS அம்சங்களுடன் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட AIயோனிக் 5, க்ராவிட்டி கோல்டு மேட், மிட்நைட் பிளாக் பேர்ல், டைட்டன் கிரே மற்றும் ஆப்டிக் ஒயிட் ஆகிய நான்கு வெளிப்புற வண்ணங்களில் வழங்கப்படுகிறது. இவற்றுடன் அப்சிடியன் பிளாக் உட்புறத் தீம் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒரே சார்ஜில் 690 கிலோமீட்டர் போலாம்! அறிமுகமாகியது Hyundai Ioniq 5 மின்சார கார் - விலை எவ்ளோ?

ஃபேஸ்லிஃப்டில் இடம்பெற்றுள்ள மேம்படுத்தல்கள் மற்றும் கூடுதல் அம்சங்கள், ஐயோனிக் 5 கார் மாடலின் விற்பனையை ஊக்குவிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். உள்ளூரில் இந்த காரானது கியா EV6, BMW iX1, BYD Sealion 7, வால்வோ EX40 போன்ற கார் மாடல்களுடன் மோதுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI