பட்ஜெட் விலை கார் வேணுமா? அறிமுகமாகியது Hyundai Grand i10 Nios Vibe edition - இவ்ளோதான் விலையா?
ஹுண்டாய் நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய Hyundai Grand i10 Nios Vibe edition காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். இவர்களின் பல்வேறு கார்களும் இந்திய சாலையில் தவிர்க்க முடியாத ஒன்றாக உலா வருகின்றனர். ஹுண்டாய் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார்களில் ஒன்று Grand i10 Nios ஆகும்.
Hyundai Grand i10 Nios Vibe Edition:
இந்த காரின் அப்டேட் வெர்சனாக ஹுண்டாய் நிறுவனம் சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள கார் Grand i10 Nios Vibe Edition. இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த கார் 2 வேரியண்ட்களில் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. ஒன்று Sportz Vibe மற்றொன்று Sportz (O) Vibe ஆகும்.
இந்த காரில் 15 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டீயரிங், ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள், டச் ஸ்கிரின் முகப்பு விளக்குகள் வசதி கொண்ட காராக இந்த கார் அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் மிகப்பெரிய சிறப்பம்சமாக இருப்பது டேஷ் கேமரா ஆகும். Grand i10 Nios காரின் எந்த வேரியண்டிலும் இல்லாத வகையில் இந்த Grand i10 Nios வைப் எடிசனில் டேஷ் கேமரா வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விலை என்ன?
இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.09 லட்சம் ஆகும்.
Sportz Vibe MT - ரூபாய் 7.09 லட்சம்
Sportz Vibe AMT - ரூபாய் 7,61 லட்சம்
Sportz (O) Vibe AMT - ரூபாய் 7,73 லட்சம்
இந்த விலை பட்ஜெட் விலைக்குள் அடங்கியிருப்பதால் நடுத்தர குடும்பத்தினருக்கும், பட்ஜெட் விலையில் கார் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும் இந்த Hyundai Grand i10 Nios Vibe Edition மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் புதிய டைட்டன் கிரே மேட் நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்புகள்:
இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 கியர்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் காராகவும் இது அறிமுகமாகியுள்ளது. ஸ்மார்ட் கி புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் வசதி உள்ளது. 6 ஏர்பேக்குகள் இந்த காரில் பாதுகாப்பு வசதி கருதி வழங்கப்பட்டுள்ளது. டயர் ப்ரசர் மானிட்டரிங் சிஸ்டமும் உள்ளது. ஹுண்டாய் நிறுவனத்தின் ஏராளமான பட்ஜெட் கார்களில் புதியதாக இணைந்துள்ள இந்த காரும் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றே கருதப்படுகிறது. ஒவ்வொரு கார் நிறுவனங்களும் தங்களது கார் விலைகளை உயர்த்தி வரும் சூழலில், தற்போது பட்ஜெட் விலையில் இந்த கார் பல வசதிகளுடன் அறிமுகமாகியிருப்பதால் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















