குறைந்த பட்ஜெட்டில் ஒரு சிறந்த ஹேட்ச்பேக் காரைத் தேடுபவர்களுக்கு ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஒரு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. கவர்ச்சிகரமான தோற்றம், சொகுசான பயணம் மற்றும் நவீன வசதிகளுடன் இந்தக் கார் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் தினசரிப் பயணங்களுக்கு மிகவும் ஏற்ற காராக இருக்கிறது. இருப்பினும், மற்ற கார்களைப் போலவே இதிலும் சில சாதக, பாதக அம்சங்கள் உள்ளன.

Continues below advertisement

இந்த காரை வாங்குவதற்கான 3 முக்கிய காரணங்கள் மற்றும் வாங்குவதற்கு முன் யோசிக்க வேண்டிய 2 குறைபாடுகள் குறித்த முழு விவரம் இதோ:

காரை வாங்குவதற்கான 3 பிளஸ் பாயிண்ட்கள்

1. சிட்டியில் ஓட்டுவது ரொம்ப ஈஸி

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் முக்கிய பலமே நகரங்களில் இதன் செயல்பாடுதான். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இந்த காரை மிக எளிதாக ஓட்ட முடியும். ஸ்டீயரிங் மிகவும் இலகுவாக இருப்பதால், குறுகிய இடங்களில் திருப்புவதும், பார்க் செய்வதும் சுலபம். காரின் அளவும் சிறியதாக இருப்பதால் டிராஃபிக்கில் சிக்கல் இருக்காது.

Continues below advertisement

டிரைவர் சீட்டில் உட்காரும்போது சாலையின் முன் பகுதி தெளிவாகத் தெரியும். இதில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. மேடு பள்ளங்களில் அதிர்வுகள் தெரியாத வகையில் சஸ்பென்ஷன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அலுவலகம் செல்வோருக்கும் குடும்பப் பயன்பாட்டிற்கும் இது மிகவும் உகந்தது.

2. சொகுசான கேபின்

இந்த காரின் இண்டீரியர் மிக நேர்த்தியாக உள்ளது. வெளிர் நிற அலங்காரங்களால் காரின் உட்புறம் மிகவும் விசாலமாகத் தோன்றும். டச்ஸ்கிரீன் டிரைவருக்கு எளிதில் எட்டும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. சிறு பொருட்களை வைக்கப் போதுமான இடவசதி உள்ளது.

பின் சீட்டில் இருவர் மிகவும் சௌகரியமாக அமரலாம்; உயரமானவர்களுக்கும் போதிய இடவசதி கிடைக்கும். பொருட்களை வைக்க 260 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இது சிறிய குடும்பங்களின் அன்றாடத் தேவைகளுக்குப் போதுமானது.

3. அசத்தலான வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்

வசதிகளைப் பொறுத்தவரை கிராண்ட் ஐ10 நியோஸ் எதிலும் சளைத்ததல்ல. டாப் வேரியண்ட்களில் 8-இன்ச் டச்ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் போன் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் ஏசி, கீலெஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட், பின் இருக்கை ஏசி வென்ட்கள், குரூஸ் கண்ட்ரோல் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆகியவை உள்ளன.

அனைத்து வேரியண்ட்களிலும் முன்பக்க மற்றும் பக்கவாட்டு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. உயர் ரக வேரியண்ட்களில் கர்ட்டன் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், மலைப்பாதைகளில் கார் பின்னோக்கிச் செல்வதைத் தடுக்கும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் குழந்தைகளுக்கான ISOFIX சீட் மவுண்ட்கள் உள்ளன.

வாங்குவதற்கு முன் யோசிக்க வேண்டிய 2 காரணங்கள் (மைனஸ் பாயிண்ட்கள்)

1. பின் சீட்டில் 3 பேர் உட்காருவது சிரமம்

கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் பின் இருக்கையில் இரண்டு பெரியவர்கள் தாராளமாக அமரலாம். ஆனால், மூன்று பெரியவர்கள் ஒன்றாக அமர்ந்தால் இடவசதி போதாது. குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்களின் போது நடுவில் அமர்பவருக்கு இது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். உங்கள் குடும்பத்தில் அடிக்கடி 5 பேர் பயணிப்பார்கள் என்றால், இதை நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும்.

2. அதிவேகப் பயணத்தில் இன்ஜின் செயல்பாடு:

இந்த காரில் 1.2 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 83 hp பவரையும், 113 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். சிஎன்ஜி மாடலில் 69 hp பவர் மற்றும் 95.2 Nm டார்க் கிடைக்கும் (இதில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே உண்டு).

இன்ஜின் சத்தமின்றி மென்மையாக இயங்கினாலும், அதிவேகமாகப் பயணிக்க விரும்புவோருக்கு இது சற்று ஏமாற்றம் அளிக்கலாம். நெடுஞ்சாலைகளில் மற்ற வாகனங்களை முந்திச் செல்லும்போது இன்ஜினிடமிருந்து எதிர்பார்க்கும் உடனடி வேகம் சற்று குறைவாகவே இருக்கும்.

இந்த காரை வாங்கலாமா?

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, நகர்ப்புறப் பயணங்கள் மற்றும் சிறிய குடும்பங்களின் தேவைகளுக்கு ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஒரு சிறந்த ஹேட்ச்பேக் கார். எளிய டிரைவிங், சொகுசான கேபின் மற்றும் நவீன பாதுகாப்பு வசதிகள் இதன் பலம். பின் இருக்கையில் மூவர் அமர்வதில் உள்ள இட நெருக்கடியும், அதிவேகப் பயணத்தில் இன்ஜின் திறன் சற்று குறைவாக இருப்பதும் இதன் பலவீனங்கள். எனவே, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் ஓட்டும் விதத்தைப் பொறுத்து முடிவெடுப்பது சிறந்தது.


Car loan Information:

Calculate Car Loan EMI