இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனம் ஹுண்டாய். இவர்களின் பட்ஜெட் கார் முதல் சொகுசு கார்கள் வரை பல்வேறு கார்களும் இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஹுண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான கார் Hyundai Exter.

Continues below advertisement

Hyundai Exter Facelift:

2026ம் ஆண்டான நடப்பாண்டில் பல்வேறு புதிய கார்களை சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அவர்கள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள கார் Hyundai Exter Facelift. இந்த கார் நடப்பாண்டின் இடைப்பகுதியில் வெளியாகும் என்று கருதப்படுகிறது. அதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. 

விலை என்ன?

இந்த கார் சந்தையில் அறிமுகமானால் இந்த காரின் விலையும் Hyundai Exter அளவிற்கே இருக்கும் என்று கருதப்படுகிறது. ஹுண்டாய் அறிமுகப்படுத்த உள்ள Hyundai Exter Facelift காரின் தொடக்க விலை ரூபாய் 6 லட்சம் முதல் அதிகபட்சம் ரூபாய் 10 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.

Continues below advertisement

எஞ்ஜின்:

இதில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, புதிய வண்ணங்களில் சந்தையில் அறிமுகமாக உள்ளது. இந்த காரில் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இதன் டேஷ்போர்ட் பல்வேறு வசதிகளுடன் அறிமுகமாக உள்ளது. இதில் 12.9 இன்ச் டச் ஸ்கிரீன் பொருத்தப்பட உள்ளது. 

வசதிகள்:

Android Auto OS வசதியுடன் இந்தியாவில் அறிமுகமாக உள்ள முதல் காராக இந்த கார் இந்திய சந்தைக்குள் வர உள்ளது. வயர்லஸ் சார்ஜர், வயர்லஸ் ஆப்பிள் கார்ப்ளே, பவர்ட் சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு வசதி கருதி இதில் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதி இதில் உள்ளது. ஏபிஎஸ் வித் இபிடி வசதி உள்ளது. எஸ்யூவி ரக காரான இந்த கார் பெட்ரோலில் ஓடும் வகையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் இரண்டிலும் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. 

83 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் இழுதிறன் கொண்டதாக அறிமுகமாக உள்ளது. 5 கியர்கள் வசதி இடம்பெற உள்ளது. சிஎன்ஜி-யிலும் ஓடும் வகையில் இந்த கார் அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரின் வருகைக்காக தற்போதே முதலே பலரும் ஆவலுடன் காத்துள்ளனர். இது எவ்வளவு மைலேஜ் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

சிட்ரோன் சி3, சுசுகி இக்னிஸ், டாடா பஞ்ச் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஹுண்டாய் நிறுவனம் இந்த கார் மட்டுமின்றி Hyundai Bayon, Hyundai New Creta மற்றும் Hyundai Verna facelift ஆகிய கார்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI