இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனம் ஹுண்டாய். இவர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக புத்தாண்டான 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான தள்ளுபடியை அறிவித்துள்ளது.
தள்ளுபடி:
இந்தியாவில் ஹுண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான கார் Hyundai Creta. இந்த காருக்கு மாதாந்திர தள்ளுபடியாக ரூபாய் 40 ஆயிரத்தை ஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால், இந்த Hyundai Creta கார் ஒரு காம்பக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும்.
Hyundai Creta விலை என்ன?
பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.48 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 25.47 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 70 வேரியண்ட்கள் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் ஓடும் ஆற்றல் கொண்டது.
மைலேஜ்:
பெட்ரோல் Hyundai Creta காரில் 497 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் Hyundai Creta காரில் 1493 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 113 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. இந்த கார் 143.8 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 கியர்களை கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் இரண்டிலும் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 14 முதல் 19 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
உட்கட்டமைப்பு மிகவும் வசதிகளை கொண்டது. மாடர்ன் கேபின் வசதிகளை கொண்டது. பனோராமிக் சன்ரூஃப் மேற்கூரை போன்ற வசதிகளையும் உள்ளடக்கியது. முன்பக்கம், பின்பக்கம் அமர்பவர்கள் கால் நீட்ட நல்ல சவுகரியமான கார் இதுவாகும்.
சிறப்புகள்:
ப்ளைண்ட் ஸ்பாட் காெலிசன் வார்னிங், ஃபார்வர்ட் கொலிசன் வார்னிங் வசதிகளை கொண்ட அடாஸ் வசதி இந்த காரில் உள்ளது. 6 ஏர்பேக் வசதிகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல், வெஹிகி் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் வசதி உள்ளது. 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர், எலக்ட்ரி்க பார்க்கிங் ப்ரேக் ஆட்டோ ஹோல்ட் வசதி உள்ளது.
17 இன்ச் சக்கரங்கள் உள்ளது. கருப்பு, வெள்ளை, சாம்பல், சிவப்பு போன்ற வண்ணங்களில் உள்ளது. கியோ செல்டாஸ், டாடா சியாரா, வெனுயூ ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI