Hyundai Offers: ரூ.1 லட்சம் தள்ளுபடி.. Grand i10 Nios முதல் i20 வரை! ஆஃபர்களை அள்ளித் தந்த ஹுண்டாய்!
Hyundai Offers: ஹுண்டாய் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ஏப்ரல் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு கார் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒவ்வொரு மாதமும் தள்ளுபடி அளித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் பிரபலமான கார் நிறுவனமாக திகழும் கார் ஹுண்டாய்.
ஹுண்டாய் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஏப்ரல் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது. எந்தெந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே விரிவாக காணலாம்.
| கார் | ரொக்கத் தள்ளுபடி | இதர தள்ளுபடி | மொத்த தள்ளுபடி |
| Grand i10 Nios | ரூபாய் 30 ஆயிரம் ( பெட்ரோல்)/ ரூபாய் 25 ஆயிரம் ( சிஎன்ஜி) | ரூபாய் 50 ஆயிரம் வரை | ரூபாய் 80 ஆயிரம் வரை |
| Grand i10 Nios (Era) | ரூபாய் 10 ஆயிரம் | ரூபாய் 13 ஆயிரம் | ரூபாய் 23 ஆயிரம் |
| Aura | ரூபாய் 15 ஆயிரம் | ரூபாய் 15 ஆயிரம் | ரூபாய் 30 ஆயிரம் |
| i20 (incl. N Line) | ரூபாய் 25 ஆயிரம் | ரூபாய் 50 ஆயிரம் | ரூபாய் 75ஆயிரம் |
| Exter | ரூபாய் 10 ஆயிரம் | ரூபாய் 35 ஆயிரம் | ரூபாய் 45 ஆயிரம் |
| Venue (incl. N Line) | ----- | ரூபாய் 5 ஆயிரம் | ரூபாய் 5 ஆயிரம் |
| Verna (New) | ----- | ரூபாய் 35 ஆயிரம் | ரூபாய் 35 ஆயிரம் |
| Creta ICE | ரூபாய் 35 ஆயிரம் | ரூபாய் 40 ஆயிரம் | ரூபாய் 75 ஆயிரம் |
| Creta Electric | ரூபாய் 25 ஆயிரம் | ரூபாய் 75 ஆயிரம் | ரூபாய் 1 லட்சம் |
| Alcazar | ரூபாய் 40 ஆயிரம் (பெட்ரோல்)/ ரூபாய் 10 ஆயிரம் (டீசல்) | ரூபாய் 30ஆயிரம் | ரூபாய் 70 ஆயிரம் (பெட்ரோல்) |
பட்ஜெட் தள்ளுபடி:
ஹுண்டாய் நிறுவனம் தனது பட்ஜெட் காரான Grand i10 Nios காருக்கு மட்டும் ரூபாய் 80 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளது. அதேபோல, அவர்களின் மற்றொரு பட்ஜெட் காரான i20 (incl. N Line) காருக்கும் ரூபாய் 75 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர்.
பட்ஜெட் விலை கார்களுக்கு ஹுண்டாய் அதிக தள்ளுபடி அளிப்பதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் பட்ஜெட் கார் விற்பனையில் டாடா, மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளிப்பது ஹுண்டாய். ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் விலை கார்களின் விற்பனையாலே இந்த நிறுவனங்களின் வருவாய் பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
1 லட்சம் தள்ளுபடி:
டாடா மற்றும் மாருதி சுசுகி நிறுவனமும் தங்களது பட்ஜெட் கார்கள் உள்பட பல்வேறு கார்களுக்கு விரைவில் ஏப்ரல் மாத தள்ளுபடியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தற்போது அதிகளவு விற்பனையாகி வரும் ஹுண்டாய் நிறுவனத்தின் Creta Electric கார் ரூபாய் 1 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஹுண்டாயின் சொகுசு கார்களில் ஒன்றான Alcazar காருக்கு ரூபாய் 70 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















