இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ஹுண்டாய் நிறுவனத்தின் Hyundai Bayon கார் இந்தியாவில் நேற்று அறிமுகமானது.

Continues below advertisement

என்ன கார்? என்ன விலை?

இதன் எந்தெந்த கார் என்ன விலை ( எக்ஸ் ஷோரூம்)? இந்த காரில் அப்படி என்ன சிறப்புகள் இருக்கிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

1. HX2 - ரூபாய் 10 லட்சம்

Continues below advertisement

2. HX3 - ரூபாய் 10.9 லட்சம்

3. HX3+ - ரூபாய் 11.8 லட்சம்

4. HX5 - ரூபாய் 12.45 லட்சம் , ரூபாய் 13.85 லட்சம் (Petrol CVT)

5.HX6 - ரூபாய் 13.57 லட்சம், ரூபாய் 14.97 லட்சம் ( Petrol CVT)

6. HX8 - ரூபாய் 15.10 லட்சம், ரூபாய் 16.54 லட்சம் (  Petrol CVT)

7. HX10 - ரூபாய் 16.65 லட்சம், ரூபாய் 18 லட்சம்

ஆன்ரோடில் இந்த கார்களின் விலை ரூபாய் 11.75 லட்சம் முதல் ரூபாய் 22.51 லட்சம் வரை விற்கப்படும்.

சிறப்புகள்:

இந்த மிட்சைஸ் எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 115 எச்பி மற்றும் 144 என்எம் டார்க் இழுதிறன் பொருத்தப்பட்டுள்ளது. 6 கியர் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்டில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது.

எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் டிரைவ் மோட்கள் உள்ளது. ஹுண்டாயின் பிரத்யேக குறியீட்டில் எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இண்டிகேட்டரும் எல்இடி விளக்குகளாக பொருத்தப்பட்டுள்ளது. 17 இன்ச் பெடல் ஸ்டைல் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் டோன் ப்ளாக் மற்றும் சில்வர் பின்பக்க பம்பர் பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்:

இதில் வயர்லஸ் சார்ஜர், ரியர் ஏசி வென்டிலேட், டைப் சி யுஎஸ்பி போர்ட் வசதிகள் உள்ளது.12.3 இன்ச் டிஜிட்டல் ஓட்டுநர் டிஸ்ப்ளே மற்றும் 12.3 இன்ச் கர்வ்ட் தொடுதிரை வசதி உள்ளது. வயர்லஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் கார்ப்ளே வசதி உள்ளது. போஸ் ப்ரிமீயம் சவுண்ட் சிஸ்டம் வசதி உள்ளது. 

ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஸ்மார்ட் கீ வித் புஷ் - பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளது. பனோரமிக் சன்ரூஃப் வசதி உள்ளது. வென்டிலேட் முன்பக்க இருக்கைகள் வசதி உள்ளது. 

பாதுகாப்பு எப்படி?

பாதுகாப்பு அம்சத்திற்காக 6 ஏர்பேக்குகள் வசதி உள்ளது. இஎஸ்சி, ஏபிஎஸ் வித் இபிடி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதி உள்ளது. ரோல்ஓவர் சென்சார், லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. ப்ளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர் வசதி உள்ளது. முன்பக்க பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது. எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக் வித் ஆட்டோ ஹோல்ட் வசதி உள்ளது. 

505 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. 43 லிட்டர் பெட்ரோல் டேங்கர் இதில் உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 205 மி.மீட்டர் ஆகும். 1497 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார் 18.6 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் பெட்ரோல் வேரியண்ட் மட்டுமின்றி சிஎன்ஜி வேரியண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI