இந்திய கார் சந்தையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிறுவனமாக ஹுண்டாய் உள்ளது. காலத்திற்கு ஏற்ப ஏராளமான புதிய கார்களை பல்வேறு அதிநவீன வசதிகளுடன் அறிமுகப்படுத்தி வருகிறது. 

அந்த வரிசையில் ஹுண்டாய் நிறுவனம் நடப்பாண்டு மற்றும் அடுத்தாண்டில் மின்சார மற்றும் ஹைப்ரிட் வகையில் 4 எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதன் பட்டியலை கீழே காணலாம்.

1. ஹுண்டாய் Ni1i ப்ரீமியம் எஸ்யூவி:

3 வரிசையில் இருக்கைகள் கொண்ட காராக ஹுண்டாய் Ni1i ப்ரீமியம் எஸ்யூவி அறிமுகமாக உள்ளது. மிகப்பெரிய குடும்பத்தினருக்கு ஏற்ற வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த கார் ஹைப்ரிட் மாடலாக உருவாகி வருகிறது. பெட்ரோலில் ஓடும் வகையில் இந்த கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. அல்காசர் மற்றும் டக்ஸனைப் போன்று நல்ல ரேஞ்ச் தரும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

2. நியூ ஜென் ஹுண்டாய் கிரெட்டா:

ஹுண்டாய் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கார் கிரெட்டா. இதன் அப்டேட் வெர்சனாக சந்தைக்கு வர உள்ள ஹுண்டாய் நியூ ஜென் கிரெட்டா. இது முழுக்க முழுக்க ஹைப்ரிட் மாடலாக சந்தைக்கு வருகிறது. உலகெங்கும் இந்த கார் வரும் 2027ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என்று கருதப்படுகிறது. பழைய கிரெட்டா காரில் இருந்து ஏராளமான மாற்றங்கள் செய்து இந்த காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 

3. ஹுண்டாய் இன்ஸ்டர் ஈவி:

இந்திய சந்தையில் காம்பக்ட் எஸ்யூவி-க்களின் விற்பனையும் சக்கைப் போடு போட்டு வருகிறது. அந்த வரிசையில் அடுத்தாண்டு இந்திய சந்தையில் ஹுண்டாய் அறிமுகப்படுத்த உள்ள காரே ஹுண்டாய் இன்ஸ்டர் ஈவி. இந்த கார் முழுக்க முழுக்க மின்சார காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா பஞ்ச் ஈவி காருக்கு போட்டியாக இந்த காரை ஹுண்டாய் வடிவமைத்துள்ளது. 

4. ஹுண்டாய் அயோனிக் 9:

இந்திய கார் சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருப்பது ஹுண்டாய் அயோனிக் 9. மிகவும் சொகுசு காராக இந்த கார் உருவாகி வருகிறது. மின்சார காரான இந்த கார் இந்திய சந்தையில் வந்தால் ஹுண்டாய் மீண்டும் ஒரு புரட்சியை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது. பல்வேறு அதிநவீன வசதிகளுடன் அட்டகாசமான தோற்றத்தில் இந்த காரை அவர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு முறை சார்ஜ் செய்தால் மணிக்கு 620 கி.மீ்ட்டர் செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க வெளிநாட்டிலே தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட உள்ளது. 

இந்த எஸ்யூவி கார்கள் நடப்பாண்டு, அடுத்தாண்டு விற்பனைக்கு கொண்டு வர ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது. சில கார்கள் 2027ம் ஆண்டு கூட சந்தையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI