மேலும் அறிய

Mahindra SUV Car Offers: ரூ. 2.5 லட்சம் வரை தள்ளுபடி.. மஹிந்திரா கார்களுக்கு மாஸ் ஆஃபர் - எந்தெந்த கார் தெரியுமா?

Mahindra SUV Car Offers: மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி கார்களுக்கு ஏப்ரல் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு கார் நிறுவனங்களும் தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஏப்ரல் மாதத்திற்கு கார் தள்ளுபடியை அறிவித்து வருகிறது. டாடா, ஹுண்டாய், மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் தங்களது கார்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.

தற்போது, மஹிந்திரா நிறுவனமும் தனது எஸ்யூவி கார்களுக்கு ஏப்ரல் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

1. Bolero Neo:

மஹிந்திராவின் மிகப்பெரிய வெற்றிகரமான காரான Bolero காரின் அப்டேட் வெர்சனாக விற்பனையாகி வருவது Bolero Neo. இதன் தொடக்க விலை ரூபாய் 10.70 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 13.29 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை ரொக்கத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் போனசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2.XUV 3XO:

மஹிந்திராவின் எஸ்யூவி கார்களில் பிரபலமான கார் இந்த XUV 3XO. இந்த காருக்கு ரொக்கமாக ரூபாய் 40 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரம் உபகரணங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 9.17 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 18.79 லட்சம் ஆகும்.

3.Scorpio Classic

இந்த Scorpio Classic காருக்கு ரொக்கமாக ரூபாய் 20 ஆயிரம் தள்ளுபடியும், உபகரணங்களுக்காக ரூபாய் 30 ஆயிரம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 7 சீட்டர் மற்றும் 9 சீட்டர் கொண்ட இந்த கார் ரூபாய் 16.59 லட்சம் முதல் ரூபாய் 21.57 லட்சம் வரை விற்கப்படுகிறது.

4. Scorpio N:

இந்த Scorpio N காரின் Z8 காருக்கு ரூபாய் 20 ஆயிரமும், Z4 காருக்கு ரூபாய் 30 ஆயிரமும் ரொக்கத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 43 வேரியண்ட் கொண்ட இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 16.99 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் 31.61 லட்சம் ஆகும். Z4 வெர்சனில் 5 வேரியண்ட் கார்கள் உள்ளது. Z8 வேரியண்டில் 2 வேரியண்ட்கள் உள்ளது.

5.Thar Roxx:

தார் காரின் அப்டேட் வெர்சன்தான் இந்த Thar Roxx. தார் காரைப் போலவே இந்த காருக்கும் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த காருக்கு ரொக்கமாக ரூபாய் 85 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. உபகரணங்கள் தள்ளுபடியாக ரூபாய் 25 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 25 வேரியண்ட் கொண்ட இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 15.85 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 29.28 லட்சம் ஆகும்.

6.XUV400 EV (EC Pro, EL Pro):

மின்சார கார்களின் விற்பனையை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த XUV400 EV (EC Pro, EL Pro) காருக்கு ரூபாய் 2.5 லட்சம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 16.62 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 18.94 லட்சம் ஆகும்.மொத்தம் 5 வேரியண்ட் உள்ளது.

7. BE6 (MY2025):

மஹிந்திராவின் இந்த BE6  காருக்கு ரூபாய் 2 லட்சம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட காருக்கு ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 20.05 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 30.29 லட்சம் ஆகும். இதில் மொத்தம் 19 வேரியண்ட்கள் உள்ளது.

8. XEV 9E:

மஹிந்திராவின் வசீகரமான கூபே எஸ்யூவி மின்சார காரான இந்த XEV 9E காரின் தொடக்க விலை ரூபாய் 23.19 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 33.31 லட்சம் ஆகும். இந்த காருக்கு 1.4 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

New Kia Sonet 2027: அதிக இடவசதி, சிறப்பான அம்சங்கள், ஒரு டீசல் எஞ்சின் தேர்வு - அசத்தலாக வரும் கியா சோனெட் 2027
அதிக இடவசதி, சிறப்பான அம்சங்கள், ஒரு டீசல் எஞ்சின் தேர்வு - அசத்தலாக வரும் கியா சோனெட் 2027
Electric Scooter: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரேஞ்சை சிங்கிள் சார்ஜில் அதிகரிப்பது எப்படி? எளிய வழிகள்!
Electric Scooter: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரேஞ்சை சிங்கிள் சார்ஜில் அதிகரிப்பது எப்படி? எளிய வழிகள்!
Maruti Suzuki eVITARA: காத்திருப்பு முடிந்தது.! டீலர்ஷிப்புகளுக்கு வந்த மாருதி இ-விதாரா; இவ்வளவு சிறப்பம்சங்களா.! விலை என்ன.?
காத்திருப்பு முடிந்தது.! டீலர்ஷிப்புகளுக்கு வந்த மாருதி இ-விதாரா; இவ்வளவு சிறப்பம்சங்களா.! விலை என்ன.?
இனி கிளட்ச் பிடிக்கவே வேண்டாம் - ஹோண்டாவின் வினோதமான புதிய பைக் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
இனி கிளட்ச் பிடிக்கவே வேண்டாம் - ஹோண்டாவின் வினோதமான புதிய பைக் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Radhan Pandit: ’’தப்புன்னா திருத்திப்போம்’’ ஜோதிடருக்கு அரசுப் பதவி- ஒரே நாளில் வாபஸ் பெற்ற தவெக அரசு!
Radhan Pandit: ’’தப்புன்னா திருத்திப்போம்’’ ஜோதிடருக்கு அரசுப் பதவி- ஒரே நாளில் வாபஸ் பெற்ற தவெக அரசு!
Edappadi Palaniswami: நீங்க செய்வது நியாயமா? - முதல்வர் விஜயிடம் முறையிட்ட எடப்பாடி பழனிசாமி.. அதிர்ந்த சட்டசபை!
Edappadi Palaniswami: நீங்க செய்வது நியாயமா? - முதல்வர் விஜயிடம் முறையிட்ட எடப்பாடி பழனிசாமி.. அதிர்ந்த சட்டசபை!
Sowmiya Anbumani: தமிழ்நாட்டில் தலைகுனிந்து செல்லும் பெண்கள்; எங்கே? ஏன்? சௌமியா அன்புமணி வேதனை!
Sowmiya Anbumani: தமிழ்நாட்டில் தலைகுனிந்து செல்லும் பெண்கள்; எங்கே? ஏன்? சௌமியா அன்புமணி வேதனை!
CM Vijay: ”ஆமா, நாங்க மைனாரிட்டி அரசு தான்” யாரையும் மிரட்டும் ஆட்சி இல்லை - CM விஜய் அதிரடியான பேச்சு
CM Vijay: ”ஆமா, நாங்க மைனாரிட்டி அரசு தான்” யாரையும் மிரட்டும் ஆட்சி இல்லை - CM விஜய் அதிரடியான பேச்சு
Tamil Nadu Floor Test: முதல்வர் விஜய் தான்.. ஆதரவு கொடுத்த 144 எம்.எல்.ஏ.க்கள்.. எதிர்ப்பு இத்தனை பேரா?
Tamil Nadu Floor Test: முதல்வர் விஜய் தான்.. ஆதரவு கொடுத்த 144 எம்.எல்.ஏ.க்கள்.. எதிர்ப்பு இத்தனை பேரா?
CM Vijay: ’’ஜோதிடர் நியமனத்தில் மறுபரிசீலனை; குதிரை பேரத்தில் அல்ல குதிரை வேகத்தில் செயல்படுவோம்’’- சிஎம் விஜய் அதிரடி
CM Vijay: ’’ஜோதிடர் நியமனத்தில் மறுபரிசீலனை; குதிரை பேரத்தில் அல்ல குதிரை வேகத்தில் செயல்படுவோம்’’- சிஎம் விஜய் அதிரடி
SP Velumani: அதிமுகவினரால் பேரவையில் ரகளை ”அதெப்படி வேலுமணி பேசலாம்” நம்பிக்கை வாக்கெடுப்பில் அமளி
SP Velumani: அதிமுகவினரால் பேரவையில் ரகளை ”அதெப்படி வேலுமணி பேசலாம்” நம்பிக்கை வாக்கெடுப்பில் அமளி
ஜோதிடம், பில்லிசூனியம்.. மூடநம்பிக்கைக்கு இடம் கொடுப்பதா?- தவெக அரசை வெளுத்து வாங்கிய விசிக
ஜோதிடம், பில்லிசூனியம்.. மூடநம்பிக்கைக்கு இடம் கொடுப்பதா?- தவெக அரசை வெளுத்து வாங்கிய விசிக
Embed widget