இன்று இரு சக்கர வாகனம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், ஒவ்வொருவருக்கும் தங்களுக்கான இரு சக்கர வாகனத்தை எப்படி தேர்வு செய்வது? என்பதில் குழப்பங்கள் இருக்கும்.
இரு சக்கர வாகனத்தைத் தேர்வு செய்வது எப்படி?
ஒரு நபர் தனக்கு உரிய இரு சக்கர வாகனத்தை எப்படி தேர்வு செய்வது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
1. பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்கள் இந்த ஸ்கூட்டர், இந்த பைக் வைத்துள்ளார்கள் என்பதற்காக அதே வாகனத்தைத் தேர்வு செய்யக்கூடாது.
2. நீங்கள் எந்த வாகனத்தை வாங்க விரும்புகிறீர்களோ, ஷோ ரூமிற்குச் சென்று அந்த வாகனத்தின் மீது உட்கார்ந்து உங்கள் கால்கள் தரையில் முழுவதும் இருக்கிறதா? என்பதை முழுவதும் சோதிக்க வேண்டும்.
3. காலை அப்படி நீங்கள் வைக்கும்போது, உங்கள் கால்கள் தரை மீது முழுவதும் அப்படியே முழுவதும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
4. அப்படி இல்லாமல் காலின் கட்டை விரலின் நுனி மூலமாக தரையைத் தொடுவது போல இருந்தால் அந்த வாகனத்தை தேர்வு செய்வதை தவிர்ப்பது நல்லது.
5. ஏனென்றால், போக்குவரத்து நெரிசலில் நீங்கள் வாகனத்தை இயக்கும்போது திடீரென வாகனத்தை ப்ரேக் அடித்து நிறுத்தும்போது உங்களால் தாங்க இயலாவிட்டால் கீழே விழும் அபாயம் உள்ளது.
6. இந்த பரிசோதனைக்குச் செல்லும்போது அதிக உயரம் கொண்ட செருப்புகளை அணிவதை தவிர்ப்பது நல்லது ஆகும்.
7. அதேபோல, எடையைத் தாங்குவது என்பது மிக மிக அவசியம். உங்களால் தாங்க இயலாத எடையைக் கொண்ட வாகனத்தைத் தேர்வு செய்வது தவறாகும்.
விலை, மைலேஜ்:
சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வாகனத்தை முன்கூட்டியே தேர்வு செய்திருக்கலாம். மைலேஜ், விலை, தரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் நீங்கள் ஒரு வாகனத்தைத் தேர்வு செய்திருக்கலாம். ஆனால், நீங்கள் தேர்வு செய்யும் ஸ்கூட்டர் அல்லது பைக்கை உங்களால் எளிதாக கையாள இயலாவிட்டால் அது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதுடன் போக்குவரத்தில் நெருக்கடியான சமயத்தில் விபத்தில் சிக்கவும் வழிவகுக்கும்.
இதனால், மேலே கூறிய முறையை கையாண்டு வாகனத்தைத் தேர்வு செய்வது உங்களுக்கு வாகனத்தை இயக்குவதற்கு மிக மிக பக்கபலமாக இருக்கும். சாலைகளில் உங்களால் வாகனத்தை எளிதாக இயக்குவதற்கும், நெருக்கடியான போக்குவரத்திலும் மிகவும் எளிதாக செல்வதற்கும் ஏதுவாக இருக்கும்.
Car loan Information:
Calculate Car Loan EMI