ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் ஏராளமான இரு சக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்திய சாலைகளில் அதிகளவு இயக்கப்படும் இரு சக்கர வாகனங்களில் ஹோண்டா SP 125.

Continues below advertisement

ஹோண்டா SP 125 இரு சக்கர வாகனத்தில் மொத்தம் 3 வேரியண்ட்கள் உள்ளது. எந்தெந்த வேரியண்ட் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். 

விலை:

1. SP 125 Drum -  ரூபாய் 1 லட்சத்து 07 ஆயிரத்து 984

Continues below advertisement

2. SP 125 25-year Anniversary Edition - ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரத்து 423

3. SP 125 Disc - ரூபாய் 1 லட்சத்து 11 ஆயிரத்து 951

எஞ்ஜின்:

இந்த பைக்குகள் நீலம், கருப்பு, சாம்பல், சிவப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கில் 123.94 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 கியர்கள் உள்ளது. இந்த பைக்கின் எடை 116 கிலோ ஆகும். இந்த பைக்கில் 11 லிட்டர் பெட்ரோல் நிரப்பும் டேங்கர் உள்ளது. 

மைலேஜ்:

6 ஆயிரம் ஆர்பிஎம் திறன் கொண்டது. 10.09 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோமீட்டர் திறன் கொண்டது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் திறன் கொண்டது. 62 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 

இந்த பைக்கில் டேங்கர் நிரப்பினால் 682 கிலோ மீட்டர் வரை செல்லலாம். 3 வருடங்கள் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 42 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ்ட் 1.76 லிட்டர் திறன் கொண்டது. ஏர் கூல்ட் கூலிங் சிஸ்டம் உள்ளது. டிஸ்ப்ளே 4.2 இன்ச் கொண்டது. 

இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு:

ப்ளூடூத் வசதி கொண்டது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி கொண்டது. ஹோண்டா லிவோ பைக்கின் தோற்றத்தில் இந்த பைக்கும் உள்ளது. எடை இலகுவாக இருப்பதாலும் அந்த பைக்கை ஓட்டுவது எளிதாக உள்ளது. தோற்றமும் இளைஞர்களை கவரும் வகையில் இருப்பதால் இந்த வாகனம் பலராலும் விரும்பப்படுகிறது.

இந்த பைக்கில் டிரம் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் SP 125 25-year Anniversary Edition மற்றும் SP 125 Disc ஆகிய 2 வேரியண்ட்கள் மட்டும் 117 கிலோ எடை கொண்டது.


Car loan Information:

Calculate Car Loan EMI