இந்திய சந்தையில் ஹீரோ ஸ்ப்லெண்டரை காட்டிலும் குறைந்த விலைக்கு புதிய 100சிசி ஷைன் பைக்கை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


புதிய மோட்டார்சைக்கிள் அறிமுகம்:


ஹோண்டா மோட்டர்சைக்கிள்  மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம்  புதிய 100 சிசி கம்யூட்டர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறுமுகப்படுத்தியுள்ளது. ஷைன் 100 என இந்த மாடல் அழைக்கப்படுகிறது. நகர போக்குவரத்தில் தினசரி பயன்படுத்தும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற  சந்தைகளை இலக்காக கொண்டுள்ளது. CB ஷைன் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனத்தில், பிஎஸ்-6 ஆர்டிஇ விதிமுறைகளில் அடங்கும் இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.


விலை விவரம்:


இந்திய சந்தையில் புதிய ஹோண்டா ஷைன் 100 மாடலின் விலை ரூ. 64 ஆயிரத்து 900, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் ஸ்ப்லெண்டர் பைக்குகளின் தொடக்க விலையே 72 ஆயிரம் ரூபாயாக உள்ள நிலையில், அதைவிட குறைந்த விலைக்கு ஹோண்டா நிறுவனம் தனது வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


யாருடன் நேரடி போட்டி?


இந்தியாவில் புதிய ஹோண்டா ஷைன் 100 மாடல் ஹீரோ ஸ்ப்லெண்டர், டிவிஎஸ் ரேடியான் மற்றும் பஜாஜ் பிளாட்டினா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், வினியோகம் மே மாதம் துவங்க உள்ளது. 


இன்ஜின் விவரம்:


புதிய ஹோண்டா ஷைன் 100 மாடலில் 100சிசி, சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இன்ஜின் 7.61 ஹெச்பி பவர், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இந்த மாடல் டியுபுலர் ஃபிரேமில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.


இதர அம்சங்கள்:


ஹோண்டா ஷைன் 100 மாடலில் ஹாலோஜன் முகப்பு விளக்கு, பல்பு இண்டிகேட்டர்கள், ஸ்பீடோமீட்டர், ஒடோமீட்டர், டுவின் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஃபியூவல் லெவல் ரீட்அவுட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.  இவைதவிர முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிரம் பிரேக்குகள், அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. 


இதர சிறப்பம்சங்கள்:


மோட்டார்சைக்கிள் 168 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்கொண்டது. வடிவமைப்பைப் பொறுத்தவரை ,ஷைன்100ஷைன்125 இன் சிறிய பதிப்பாகத் தெரிகிறது. ஷைன்100ஆனதுமுன்பக்க கவ்ல், பிளாக்- அவுட் அலாய் வீல்கள், அலுமினிய கிராப் ரெயில் மற்றும் நேர்த்தியான மப்ளர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 


கலர் ஆப்ஷன்:


புதிய ஹோண்டா ஷைன் 100 மாடல்- பிளாக் மற்றும் ரெட் ஸ்டிரைப்கள், பிளாக் மற்றும் புளூ ஸ்டிரைப்கள், பிளாக் மற்றும் கிரீன் ஸ்டிரைப்கள், பிளாக் மற்றும் கோல்டு ஸ்டிரைப்கள், பிளாக் மற்றும் கிரே ஸ்டிரைப்கள் என ஐந்து விதமான வண்ணங்களில் கிடைக்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI