Honda Discounts: பெஸ்ட் ஹைப்ரிட், எஸ்யுவி.. ரூ.1.5 லட்சம் குறைந்த விலை - தள்ளுபடியை அள்ளிப் போட்ட ஹோண்டா..
Honda Car Discounts Feb 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹோண்டா கார் மாடல்களுக்கு, பிப்ரவரி மாதத்தில் ரூ.1.5 லட்சம் வரை சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Honda Car Discounts Feb 2026: பிப்ரவரி மாதத்தில் ஹோண்டா கார் நிறுவனத்தின் எந்தெந்த காருக்கு எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா கார்களுக்கு சலுகைகள் அறிவிப்பு:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வாடிக்கையாளர்கள் சேமிப்புடன் புதிய கார்களை சொந்தமாக்குவதற்கான, அட்டகாசமான அறிவிப்பை ஹோண்டா வெளியிட்டுள்ளது. ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள மாடல்களுக்கு பிப்ரவரி மாதத்தில் ரூ.1.5 லட்சம் வரை சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டாவின் எந்த காருக்கு எவ்வளவு சலுகை?
1. ஹோண்டா அமேஸ்
மூன்றாவது தலைமுறை அமேஸ் கார் மாடல் மீது ஹோண்டா நிறுவனம் 57 ஆயிரம் ரூபாய் வரை சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இரண்டாவது தலைமுறை எடிஷனுடன் இந்த கார் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பலன்கள் எந்தெந்த பிரிவில் வழங்கப்படுகின்றன என்ற விவரங்களை வெளியிடாவிட்டலும், கூடுதலாக கார்ப்ரேட் சலுகைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமேஸ் காரானது V, VX,ZX ஆகிய ட்ரிம்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரண்டிலுமே 1.2 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த சப்-4 மீட்டர் செடான் கார் மாடலின் விலையானது, மேனுவல் வேரியண்டில் ரு.7.47 லட்சத்தில் தொடங்கி ரூ.9.21 லட்சம் வரை நீள்கிறது. ஆட்டோமேடிக் வேரியண்டின் விலை ரூ.8.62 லட்சம் தொடங்கி ரூ.9.99 லட்சம் வரை நீள்கிறது.
2. ஹோண்டா சிட்டி
ஐந்தாவது தலைமுறை சிட்டி கார் மாடல் மீது ரூ.1.27 லட்சம் வரை சலுகை மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதிலும் எந்தெந்த பிரிவில் எவ்வளவு சலுகைகள் வழங்கப்படுகின்றன என விவரிக்கப்படாவிட்டாலும், ஆனால் அவை கூடுதல் கார்ப்ரேட் சலுகைகளில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரீமியம் செடானாது SV, V, VX மற்றும் ZX என அனைத்து வேரியண்ட்களிலும் 1.5 லிட்டர் நேட்சுரலில் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது.

மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் எடிஷனின் விலை ரூ.11.95 லட்சத்தில் தொடங்கி ரூ.14.86 லட்சம் வரை நீள்கிறது. CVT ட்ரான்ஸ்மிஷன் எடிஷனின் விலை ரூ.13.90 லட்சத்தில் தொடங்கி ரூ.16.07 லட்சம் வரை நீள்கிறது. நடப்பாண்டின் இறுதியில் இந்த ஐந்தாவது தலைமுறை சிட்டி கார் மாடலுக்கு இரண்டாவது ஃபேஸ்லிஃப்டை வழங்கும் பணியில் ஹோண்டா ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிட்டி காரில் ஹைப்ரிட் ஆப்ஷன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
| மாடல் | வேரியண்ட்கள் | விலை | தள்ளுபடி |
| ஹோண்டா சிட்டி | V, VX,ZX | ரூ.7.47 -ரூ.9.99 லட்சம் | ரூ.57,000 |
| ஹோண்டா அமேஸ் | SV, V, VX, ZX | ரூ.11.95 - ரூ.16.07 லட்சம் | ரூ.1.27 லட்சம் |
| ஹோண்டா எலிவேட் | SV, V, VX, ZX, ப்ளாக், அட்வென்சர் எடிஷன் | ரூ.11.59 - ரூ.16.56 லட்சம் | ரூ.1.48 லட்சம் |
3. ஹோண்டா எலிவேட்
ஹோண்டா நிறுவனத்தின் பிப்ரவரி மாதத்திற்கான மிகப்பெரிய சலுகையை, எஸ்யுவி மாடலான எலிவேட் பெற்றுள்ளது. அதிகபட்சமாக ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் வரையில் இந்த கார் மீது வாடிக்கையாளர்கள் சேமிக்கலாம். ஐந்தாவது தலைமுறை சிட்டி கார் மாடலை போல்வே, எலிவேட்டிலும் 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் ஆனது, மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த எஸ்யுவி ஆனது SV, V, VX, ZX, ப்ளாக் எடிஷன் மற்றும் அட்வென்சர் எடிஷன் க்ரேட்ஸ் ஆகிய வடிவங்களில் கிடைக்கிறது. மேனுவல் வேரியண்டில் ரூ.11.59 லட்சத்தில் தொடங்கி ரூ,15.38 லட்சம் வரையிலும், ஆட்டோமேடிக் வேரியண்ட்களில் ரூ.13.22 லட்சம் தொடங்கி ரூ.16.56 லட்சம் வரையிலும் எலிவேட்டின் விலை நீள்கிறது.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா சியாரா மற்றும் கியா செல்டோஸ் மாடல்கள் காரணமாக மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ளது. இதோடு விரைவில் புதிய ஸ்கோடா குஷக், முற்றிலும் புதிய ரெனால்ட் டஸ்டர், நிசான் டெக்டான் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டைகன் ஆகிய மாடல்களும் அடுத்தடுடுத்து 2-3 மாதங்களில் சந்தைப்படுத்தப்பட உள்ளன. இதனால் ஏற்படும் போட்டியை ஈடுசெய்ய நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் எலிவேட்டிற்கு ஃபேஸ்லிஃப்ட் வழங்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. ஆனாலும் கூட செயல்திறன் மற்றும் அம்சங்கள் அடிப்படையில், புதிய போட்டியாளர்களுக்கு சவால் விடுப்பது கடினமே என கூறப்படுகிறது.
























