இந்தியாவில் நாளுக்கு நாள் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஹோண்டா. இவர்களின் மின்சார ஸ்கூட்டர் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Continues below advertisement

1. Honda Activa e:

ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டர் Honda Activa. இதன் மின்சார வேரியண்டே இந்த Honda Activa e மின்சார ஸ்கூட்டர் ஆகும். இதில் 2 வேரியண்ட் உள்ளது. முதல் வேரியண்ட் விலை ரூபாய் 1 லட்சத்து 23 ஆயிரத்து 77 ஆகும். 2வது வேரியண்ட் விலை ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரத்து 178 ஆகும். 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

ஒரு முறை சார்ஜ் செய்தால் 102 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இரண்டாவது வேரியண்டில் ப்ளூடூத் வசதி, ஜிபிஎஸ் வசதி உள்ளது. கருப்பு, வெள்ளை, நீலம், வெளிர் நீலம் உள்பட 5 வண்ணங்களில் இருந்த இ ஸ்கூட்டர் உள்ளது. 22 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் மோட்களில் உள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் உள்ளது.

Continues below advertisement

2. Honda QC1:

இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 92 ஆயிரத்து 252. ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதன் எடை 89.5 கிலோ ஆகும். அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. நார்மல், எகோ வசதி உள்ளது. பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 77 என்எம் டார்க் இழுதிறன் உள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் ட்ரம் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ், பின்பக்கம் 5 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 169 மி.மீட்டர் ஆகும். 3 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி ஆகும்.

தற்போது இந்தியாவில் இ ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து வரும் சூழலில், புகழ்பெற்ற ஹோண்டா நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.  குறிப்பாக, இந்த இ ஸ்கூட்டர்கள் பட்ஜெட் விலையில் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் செளகரியமாக உள்ளது. இதன் வடிவமைப்பும், எடையும் அனைத்து ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI