இந்தியாவில் இரு சக்கர வாகனம் ஓட்டும் பலரும் விரும்பும் வாகனமாக டியோ உள்ளது. ஏனென்றால் ஸ்போர்ட்ஸ் ரகத்தில் வசீகரமான தோற்றத்தில் நல்ல மைலேஜ் பிக்கப் என பல விதத்திலும் டியோ அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.
Dio 125:
Dio 125 இந்தியாவில் தற்போது விற்பனையில் அசத்தி வருகிறது. இ ஸ்கூட்டர், பல விதமான புதிய ஸ்கூட்டர்கள் இருந்தாலும் ஸ்கூட்டர் வாங்க விரும்பும் ஒவ்வொருவரின் முதன்மைத் தேர்வாக டியோ இருக்கும். Dio 125 ஸ்கூட்டரில் 123 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் உள்ளது. இது ட்யூப்லஸ் டயர் வசதி கொண்டது ஆகும்.
மணிக்கு 95 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும். 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொண்டது. 6 ஆயிரத்து 250 ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது ஆகும். இது ஒரு லிட்டருக்கு 48 கி.மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது ஆகும். இந்த Dio 125 மொத்தம் 2 வேரியண்ட்களில் உள்ளது. ஒன்று DLX மற்றொன்று H-Smart variant ஆகும்.
சிறப்பம்சங்கள்:
நவீன கால தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இதில் ஸ்மார்ட்போனையும் இணைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. கூகுள் மேப் வசதியும் இதில் உள்ளது. மேலும், செல்போன் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தியை அலர்ட் செய்யும் வசதியும் உண்டு. மேலும், இந்த Dio 125 சாவி ரிமோட் லாக் செய்யும் வசதி கொண்டது. திருட்டு முயற்சி நடந்தால் எச்சரிக்கை, ரிமோட்டில் ஸ்டார்ட் செய்தல் போன்ற வசதியும் இதில் உள்ளது.
இதில் உள்ள 123.92 சிசி எஞ்ஜின் ஏர் கூல்ட் ஆகும். 8.3 பிஎஸ் மற்றும் 10.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது இந்த Dio 125 ஆகும். டிஸ்க் ப்ரேக் வசதியும் இதில் உள்ளது. இது சாலையில் வேகமாக செல்லும்போது ஏதேனும் குறுக்கே வந்தால் வண்டியை நிறுத்துவதற்கு ஒத்துழைக்கும்.
வெற்றிகரமான விற்பனை:
125 சிசி எஞ்ஜின் திறன் கொண்ட ஸ்கூட்டிகளுக்கு போட்டியாக இந்த Dio 125 சந்தையில் ஹோண்டா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. TVS Ntorq 125, Aprilia SR125, Yamaha RayZR 125, Suzuki Avenis, மற்றும் Hero Xoom 125 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக சந்தையில் களமிறக்கப்பட்டு வெற்றிகரமாக விற்பனையாகி வருகிறது.
இந்த வண்டியின் வசீகரமான தோற்றம், மைலேஜ், பிக்கப் திறன் பலரையும் கவரும் வகையில் இருப்பதால் இந்த வண்டியை பலரும் விரும்புகின்றனர். பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் விரும்பும் வாகனமாக இது உள்ளது.
விலை என்ன?
சென்னையில் இந்த ஹோண்டா டியோ 125 DLXன் ஆன் ரோட் விலை ரூபாய் 1.18 லட்சம் ஆகும். அதே டியோ 125 H-Smart ஸ்கூட்டியின் விலை ரூபாய் 1.26 லட்சம் ஆகும்.
ஹோண்டா நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள ஆக்டிவா மற்றும் டியோ இந்த இரண்டு ஸ்கூட்டர்களுமே இந்திய சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஸ்கூட்டர்கள் ஆகும். ஆக்டிவா ஒவ்வொரு மாதமும் அதிரிபுதிரி விற்பனை நடந்து வருகிறது.
தற்போது ஆக்டிவா 6ஜி விற்பனை அமோகமாக நடந்து வரும் சூழலில் ஆக்டிவா 7ஜியை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளனர். அதேபோல, டியோ-விலும் விரைவில் புதிய ரகம் அறிமுகமாகவும் வாய்ப்பு உள்ளது. ஆக்டிவாவிலும் 110 சிசி, 125 சிசி ஸ்கூட்டர்கள் விற்பனையாகி வருகிறது. டியோவிலும் 110 சிசி வெற்றிகரமாக விற்பனையானதைத் தொடர்ந்து 125 சிசி தற்போது விற்பனையாகி வருகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI