இந்தியாவின் பிரபலமான மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் ஹோண்டா. இரு சக்கர வாகனத்தில் கொடி கட்டிப் பறக்கும் இந்த நிறுவனம் கார் தயாரிப்பில் பெரியளவில் ஆதிக்கத்தைச் செலுத்தாவிட்டாலும் இவர்களது Honda City கார் இந்திய சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்திய கார் ஆகும்.
Honda City கார்:
இந்த Honda City காரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.
ஹோண்டா சிட்டி கார் ஒரு வசீகரமான மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 14.91 லட்சம் ஆகும். மொத்தம் 14 வேரியண்ட்கள் இந்த காரில் உள்ளது. இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 19.59 லட்சம் ஆகும்.
வேரியண்ட்களும், விலைகளும்:
1. City SV Petrol MT - ரூ.14.91 லட்சம்
2. City Elegant Edition MT - ரூ.15.40 லட்சம்
3. City V Petrol MT - ரூ.15.53 லட்சம்
4. City V Petrol MT Apex Edition - ரூ.15.99 லட்சம்
5.City VX Petrol MT - ரூ.16.77 லட்சம்
6. City V Petrol CVT - ரூ.16.98 லட்சம்
7. City VX Petrol MT Apex Edition - ரூ.17.26 லட்சம்
8. City V Petrol CVT Apex Edition - ரூ.17.47 லட்சம்
9. City Sport Petrol CVT - ரூ.17.55 லட்சம்
10. City ZX Petrol MT - ரூ.18.14 லட்சம்
11. City VX Petrol CVT - ரூ.18.22 லட்சம்
12. City VX Petrol CVT Apex Editon - ரூ.18.45 லட்சம்
13. City VX Petrol CVT Apex Editon - ரூ.19.59 லட்சம்
14. City Elegant Edition CVT - ரூ.16.98 லட்சம்
மைலேஜ்:
மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வெர்சனில் உள்ள இந்த கார் பெட்ரோலில் மட்டுமே ஓடும் ஆற்றல் கொண்டது. 1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 119 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது.
மேனுவல் கார் 17.8 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. ஆட்டோமெட்டிக் கார் 18.4 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
இதன் எஞ்ஜின் சுமூகமாக உள்ளது. ஓட்டுவதற்கும் இலகுவாக உள்ளது. கேபின் மிகவும் செளகரியமாக ஓட்டுனருக்கு உள்ளது. காலை நீட்டுவதற்கு மிகவும் வசதியாக இதன் இருக்கைகளும், இட வசதியும் உள்ளது. குறைந்த வேகத்தில் கியர் மாற்றும்போது சற்று சிரமமாக இருப்பதாக பயனாளர்கள் விமர்சிக்கின்றனர்.
சிறப்புகள்:
145 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 மற்றும் 7 கியர்களிலும் இந்த கார் உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. சன்ரூஃப் மேற்கூரை உள்ளது. கிளைமேட் கன்ட்ரோல் வசதி உள்ளது. ஆட்டோ டோர் லாக் வசதி உள்ளது. 7 இன்ச் எச்டி டச் டிஸ்ப்ளே உள்ளது.
எட்டு ஸ்பீக்கர்கள் இதில் உள்ளது. ஸ்மார்ட்வாட்ச், அலெக்ஸா கனெக்ஷன் வசதி இதில் உள்ளது. 506 லிட்டர் டிக்கி வசதி இதில் உ்ளளது. 6 ஏர்பேக்குகள் இதில் உள்ளது. ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஹேண்ட்டிலிங் அசிஸ்ட், ஏபிஎஸ் வித் இபிடி வசதி, ப்ரேக் அசிஸ்ட், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் ப்ரஷர் மானிட்டரிங், 5 சீட்டர்கள் வசதி கொண்டது.
ASEAN NCAP தர பரிசோதனையில் ஹோண்டா சிட்டி வசதி உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI