Honda CB350:  ஹோண்டா நிறுவனத்தின் CB350 மாடலின் தொடக்க விலை,  இந்திய சந்தையில் 2 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Honda CB350 மோட்டார்சைக்கிள்:


கிளாசிக் மோட்டார்சைக்கிள்கள் தற்போது 300 முதல் 500சிசி செக்மென்ட்டில் மிகவும் பிரபலமாக உள்ளன . இந்த பிரிவில் இடம்பெறும் வாகனங்களின் விலை ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மட்டுமே, 85 சதவிகிதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இந்நிலையில்,  ராயல் என்ஃபீல்டின் ஆதிக்கத்திற்கு போட்டியாக ஹோண்டா நிறுவனம் தனது CB350 மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. வாகனத்திற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டெலிவெர் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Honda CB350 விலை விவரங்கள்:


CB350 மாடலின் பெயரில் முன்புறத்தில் H’ness அல்லது பின்புறத்தில் RS என எந்த பெயரும் இல்லையா என தேட வேண்டாம். காரணம் CB350 என்ற பெயரில் மட்டுமே தனது  புதிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. DLX மற்றும் DLX Pro என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த மோட்டார்சைக்கிளின் விலை, முறையே ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 80 ரூபாய் மற்றும்  2 லட்சத்து 24 ஆயிரத்து 755 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பிக் விங் டீலர்ஷிப் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஹோண்டா CB350 மாடலானது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 மாடலுக்கு கடும் போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.


இன்ஜின் விவரங்கள்:


348cc, ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது ஹோண்டா CB350 மாடல்களைப் போலவே, 21hp, 29Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதியும் உள்ளது. 


வாகனத்தில் உள்ள அம்சங்கள்:


புதிய கிளாசிக் CB350 மொத்தம் ஐந்து வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.  அதன்படி,  ரெட் மெட்டாலிக், பியர்ல் இக்னியஸ் பிளாக், மேட் க்ரஸ்ட் மெட்டாலிக், மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக் மற்றும் மேட் டூன் பிரவுன் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.  வடிவமைப்பைப் பொருத்தவரையில் ஹோண்டா பின்னோக்கிச் சென்றாலும், அம்சங்களைப் பொருத்தவரை CB350 தொலைநொக்கு பர்வை கொண்டதாக உள்ளது. டாப்-ஸ்பெக் டிஎல்எக்ஸ் ப்ரோ, புளூடூத் ஆதரவுடன் ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் (எச்எஸ்விசிஎஸ்), ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் (எச்எஸ்டிசி, இது அடிப்படையில் டிராக்ஷன் கன்ட்ரோல்), டூயல்-சேனல் ஏபிஎஸ், 18 இன்ச் வீல்கள், LED விளக்குகள், செமி-டிஜிட்டல் கருவிகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


 


Car loan Information:

Calculate Car Loan EMI