இந்தியாவில் தனது பிரபலமான கார் மாடல்களுக்கு ஆகஸ்ட் 2025 சலுகைகளை ஹோண்டா அறிவித்துள்ளது. ஜப்பானிய வாகன உற்பத்தியாளரான ஹோண்டா தனது எலிவேட், சிட்டி, அமேஸ் உள்ளிட்ட மாடல்களில் ரூ.1.22 லட்சம் வரை தள்ளுபடிகளை வழங்குகிறது. டீலர்ஷிப் மற்றும் மாநிலத்தைப் பொறுத்து தள்ளுபடிகள் மாறுபடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹோண்டா எலிவேட்
ஹோண்டா எலிவேட்டின் உயர்தர ZX டிரிமிற்கு ரூ.1.22 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. VX வேரியண்டிற்கு ரூ.78,000 தள்ளுபடி கிடைக்கும். எலிவேட்டின் விலை ரூ.11.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. இதன் SUV வடிவமைப்பு, உயர்ந்த தரமான அம்சங்கள், மற்றும் நகர-ஹைவே பயணங்களுக்கு ஏற்ற வசதிகள் இதை இந்நிறுவனத்தின் ஸ்பேஷல் காராக மாற்றியுள்ளது, இந்த மாடல் தற்போது ஹோண்டாவின் SUV பிரிவில் அதிகம் விற்பனை ஆகும் வாகனமாக உள்ளது.
ஹோண்டா சிட்டி
பெட்ரோல் டிரிம்களுக்கான ஹோண்டா சிட்டி மாடலுக்கு அதிகபட்சம் ரூ.1,07,300 தள்ளுபடி வழங்கப்படுகிறது. கடந்த மாதம் விலை குறைக்கப்பட்ட சிட்டி e:HEV மாடலுக்கு இம்மாதம் சலுகை இல்லை. சிட்டியின் விலை ரூ.12.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.
ஹோண்டா சிட்டி, இந்திய சந்தையில் தனது தரம், வடிவமைப்பு மற்றும் நம்பகத்தன்மையால் வாடிக்கையாளர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. 1998ஆம் ஆண்டு அறிமுகமானது முதல், மிட்-சைஸ் செடான் பிரிவில் ஹோண்டா சிட்டி டிரேட் மார்க் காராக இருந்து வருகிறது.விரிவான கேபின், உயர்தர உள்துறை பொருட்கள், வசதியான இருக்கைகள், மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவை நகரப் பயணம் முதல் நீண்ட தூர ஹைவே பயணம் செய்ய ஏற்ற காராக உள்ளது
ஹோண்டா அமேஸ்
இரண்டாம் தலைமுறை அமேஸுக்கு ரூ.97,200 தள்ளுபடி வழங்கப்படுகிறது. மூன்றாம் தலைமுறை அமேஸின் ZX டிரிமிற்கு ரூ.77,200 மற்றும் VX டிரிமிற்கு ரூ.67,200 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இரண்டாம் தலைமுறை அமேஸின் விலை ரூ.7.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல், புதிய அமேஸின் விலை ரூ.8.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.காம்பாக்ட் செடான் பிரிவில் சிறந்த விற்பனையாளர், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற வடிவமைப்பு ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாக பார்க்கப்படுகிறது
மேலும் ஹோண்டா நிறுவனம் கூறியதாவது, சலுகைகள் மாநிலம் மற்றும் டீலர்ஷிப் அடிப்படையில் மாறுபடும் என்பதால், வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள ஹோண்டா டீலர்ஷிப்பை தொடர்புகொண்டு தள்ளுபடி விவரங்களை உறுதிசெய்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI