Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
Honda Car Offers: ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு ஏப்ரல் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா. இரு சக்கர வாகனத்தில் முன்னோடி நிறுவனமாக திகழும் ஹோண்டா நிறுவனத்தின் கார்களுக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது கார்களுக்கு ஏப்ரல் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளனர். அந்த வரிசையில், ஹோண்டா நிறுவனமும் தனது கார்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.
1. Amaze:
ஹோண்டா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் இந்த ஹோண்டா Amaze. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.98 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 8.98 லட்சம். இந்த காரின் 2ம் தலைமுறை ( ஜெனரேஷன்) 3வது தலைமுறை ( ஜெனரேஷன்) ZX வேரியண்ட் கார்களுக்கு ஏப்ரல் மாத தள்ளுபடி அளித்துள்ளனர். இந்த 2 வேரியண்ட்களுக்கும் ரூபாய் 30 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். இதுதவிர பிற தள்ளுபடியும் அளித்துள்ளனர்.
2.City:
ஹோண்டாவின் புகழ்பெற்ற கார் ஹோண்டா City. இந்த காரின் 5வது தலைமுறை காருக்கு ரூபாய் 1 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த காருக்கு பிற தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 14.96 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 19.59 லட்சம் ஆகும்.
3. City eHEV :
ஹோண்டாவின் இந்த City eHEV கார் ஒரு ஹைப்ரிட் கார் ஆகும். ஆட்டோமெட்டிக் காரான இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 24.82 லட்சம் ஆகும். கடந்த 2025ம் ஆண்டு தயாரான City eHEV காருக்கு ரூபாய் 1.80 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவே, நடப்பாண்டில் தயாரான காருக்கு 35 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
4. Elevate:
ஹோண்டா நிறுவனத்தின் இந்த Elevate MT காருக்கு தள்ளுபடி ரூபாய் 1 லட்சம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 14.37 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 20.73 லட்சம் ஆகும்.
இந்த கார்களுக்கான தள்ளுபடி வரும் ஏப்ரல் மாத இறுதிவரை உள்ளது.
டாடா, மஹிந்திரா, மாருதி சுசுகி போன்ற பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு கார்களைத் தயாரித்து வரும் நிலையில் ஹோண்டா நிறுவனம் தனது பழைய மாடல் கார்களையே விற்பனை செய்து வருகிறது. விரைவில் அவர்களும் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















