காலம் செல்லும் வேகத்தில் இன்று நம் அனைவரின் வீட்டிலுமே குறைந்தது ஒரு இரு சக்கர வாகனமாவது இருக்கும். மின்சார வாகனங்களின் வளர்ச்சி பலரையும் வாங்க வைக்கும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், மின்சாரம் ஆகியவற்றில் இயங்கும் வாகனங்கள் வந்து விட்ட நிலையில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கும். இந்த நிலையில் நீங்கள் ஹோண்டா ஆக்டிவா அல்லது டிவிஎஸ் ஜூபிடரை வாங்க திட்டமிட்டிருந்தால்,  எந்த வாகனம் சிறந்தது என்பதைப் பார்க்கலாம். 

Continues below advertisement

ஹோண்டா ஆக்டிவா

இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா ஆறு வண்ண வகைகளில் கிடைக்கிறது . இந்த ஹோண்டா ஆக்டிவா இரு சக்கர வாகனமானது ஸ்டாண்டர்ட் , டீலக்ஸ் மற்றும் ஸ்மார்ட் என மூன்று வகைகளில் கிடைக்கிறது . ஸ்டாண்டர்ட் மாடலில் ஹாலஜன் ஹெட் லேம்ப் (முகப்பு விளக்கு) உள்ளது. அதே நேரத்தில் டீலக்ஸ் மற்றும் ஸ்மார்ட் மாடல்களில் எல்இடி ஹெட் லேம்ப்கள் உள்ளன. இந்த இரு சக்கர வாகனத்தில் ஸ்மார்ட் வேரியண்டில் மட்டுமே புளூடூத் இணைப்பு வசதி உள்ளது. 

ஹோண்டா ஆக்டிவாவின் ஸ்டாண்டர்ட் மாடல் ரூ.79,128 (எக்ஸ்-ஷோரூம்) , டீலக்ஸ் மாடல் ரூ.88,780 (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ஸ்மார்ட் மாடல் ரூ.91,534 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது . இந்த ஸ்கூட்டர் 4-ஸ்ட்ரோக், SI எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது .ஹோண்டா ஆக்டிவா லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தருவதாகக் சொல்லப்படுகிறது.

Continues below advertisement

டிவிஎஸ் ஜூபிடர்

இந்திய சந்தையில் டிவிஎஸ் ஜூபிடர் நான்கு வகைகளில் கிடைக்கிறது. அதாவது ஸ்பெஷல் எடிஷன் , ஸ்மார்ட் சோனெக்ட் டிஸ்க் , ஸ்மார்ட் சோனெக்ட் டிரம் மற்றும் டிரம் அலாய் . இது ஏழு வண்ணங்களில் கிடைக்கிறது . டிவிஎஸ் ஜூபிடரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.82,784 இல் இருந்து தொடங்குகிறது. இந்த டிவிஎஸ் ஜூபிடரில் 6,500 ஆர்பிஎம்மில் 5.9 கிலோவாட் பவரையும் , 5,000 ஆர்பிஎம்மில் 9.2 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் ஒற்றை சிலிண்டர் , 4-ஸ்ட்ரோக் எஞ்சின் உள்ளது . டிவிஎஸ் ஜூபிடர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 53 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று சொல்லப்படுகிறது.

இந்த டிவிஎஸ் இரு சக்கர வாகனத்தில் இரண்டு ஹெல்மெட்களை வைத்திருக்க போதுமான இடம் உள்ளது . ஸ்டைலிங் டெயில்லைட் பார் கொண்டுள்ளது. இந்த இரு சக்கர வாகனத்தில் பாதுகாப்பு முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது . சிலர் வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு முன் சைடு ஸ்டாண்டை அகற்ற மறந்து விடுவதை நிவர்த்தி செய்ய, சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI