Honda Activa vs TVS Jupiter:  ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஆகியவை இந்திய சந்தையில் விற்கப்படும் இரண்டு பிரபலமான ஸ்கூட்டர்கள்.  இந்த இரண்டு வண்டிகளுக்கான டிமாண்ட் எப்போதும் அதிகமகா இருக்கும். ஆக்டிவா மற்றும் ஜூபிடர் ஆகியவை ஒரே விலை வரம்பில் வருகின்றன, இரண்டும் ₹75,000 க்கும் குறைவாகத் தொடங்குகின்றன. இந்த இரண்டு ஸ்கூட்டர்களின் பவர் மற்றும் மைலேஜை ஆராய்வோம்.

Continues below advertisement

ஹோண்டா ஆக்டிவா

ஹோண்டா ஆக்டிவா இந்திய சந்தையில் ஆறு கலர்களில் கிடைக்கிறது. இது ஸ்டாண்டர்ட், டிஎல்எக்ஸ் மற்றும் ஸ்மார்ட் என மூன்று வகைகளில் கிடைக்கிறது. ஸ்டாண்டர்ட் மாடலில் ஹாலஜன் ஹெட்லேம்ப் உள்ளது, அதே நேரத்தில் டிஎல்எக்ஸ் மற்றும் ஸ்மார்ட் மாடல்களில் எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன. மேலும் ஆக்ட்டிவாவின்  ஸ்மார்ட் வேரியண்டில் மட்டுமே புளூடூத் இணைப்பு மற்றும் நேவிகேஷன் ஆப்சன் உள்ளது.

ஹோண்டா ஆக்டிவாவின் ஸ்டார்டிங் மாடல் ₹74,619 (எக்ஸ்-ஷோரூம்), DLX மாடல் ₹84,272 (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ஸ்மார்ட் மாடல் ₹87,944 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. ஆக்டிவாவில் 4-ஸ்ட்ரோக், SI எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தருவதாகக் கூறுகிறது.

Continues below advertisement

டிவிஎஸ் ஜூபிடர்

இந்திய சந்தையில் டிவிஎஸ் ஜூபிடர் நான்கு வகைகளில் கிடைக்கிறது: ஸ்பெஷல் எடிஷன், ஸ்மார்ட் சோனெக்ட் டிஸ்க், ஸ்மார்ட் சோனெக்ட் டிரம் மற்றும் டிரம் அலாய். ஜூபிடர் மொத்தம் ஏழு  கலர்களில்  கிடைக்கிறது. டிவிஎஸ் ஜூபிடரின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹72,400 இல் தொடங்குகிறது. ஜூபிடர் 6,500 ஆர்பிஎம்மில் 5.9 கிலோவாட் பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 9.2 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் ஒற்றை சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் எஞ்சின் உள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 53 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று கூறுகிறது.

ஜூபிடரில் இரண்டு ஹெல்மெட்களை வைத்திருக்க போதுமான இடத்தை வழங்குகிறது. ஸ்டைலிங் டெயில்லைட் பார் கொண்டுள்ளது. வாகனத்தில் பாதுகாப்பு முக்கிய கவனம் செலுத்துகிறது. சிலர் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்வதற்கு முன் சைடு ஸ்டாண்டை அகற்ற மறந்து விடுகிறார்கள். இதை நிவர்த்தி செய்ய, ஸ்கூட்டரில் சைடுஸ்டாண்ட் இண்டிகேட்டர் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI