Highest Mileage Cars in India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செடான், ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யுவி என ஒவ்வொரு பிரிவிலும் அதிக மைலேஜ் தரும் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அதிக மைலேஜ் தரும் கார்கள்:
புதிய காரை வாங்கும் போது, மக்கள் மைலேஜில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இந்தியாவில் நல்ல மைலேஜ் தரும் பல கார்கள் உள்ளன. இந்நிலையில், அதிக மைலேஜ் தரும் டாப் 5 பெட்ரோலில் இயங்கும் கார்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். இதில் ஹேட்ச்பேக், செடான் மற்றும் எஸ்யூவி என அனைத்து வகையான கார்களும் அடங்கும்.
அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார்கள்:
மாருதி கிராண்ட் விட்டாரா/டொயோட்டா ஹைரைடர்: தற்போது, Maruti Suzuki Grand Vitara மற்றும் Toyota Urban Cruiser Hyrider SUV ஆகியவை இந்தியாவில் அதிக எரிபொருள் திறன் கொண்ட கார்களாக உள்ளன. 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் அட்கின்சன் பெட்ரோல் வலிமையான ஹைப்ரிட் இன்ஜின் மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கார்களும் லிட்டருக்கு 27.93 கிமீ மைலேஜ் தருகின்றன.
ஹோண்டா சிட்டி e:HEV: ஹோண்டா சிட்டி என்பது வலுவான ஹைப்ரிட் இன்ஜினுடன் இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் கார் ஆகும். இதில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் அட்கின்சன் இன்ஜின் மற்றும் இரண்டு மின்சார மோட்டார்கள் உள்ளன. ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 27.13 கிமீ மைலேஜ் தருகிறது. இதில் பல டிரைவ் மோடுகளும் உள்ளன.
மாருதி சுசூகி செலிரியோ: மாருதி சுசூகி செலிரியோ அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார் ஆகும். இது DualJet K10 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் ஆற்றலைப் பெறுகிறது. செலிரியோ மேனுவல் எடிஷன் லிட்டருக்கு 25.24 கிமீ மைலேஜும், ஆட்டோமேட்டிக் எடிஷன் லிட்டருக்கு 26.68 கிமீ மைலேஜும் வழங்குகிறது. செலிரியோவின் சராசரியைப் பார்த்தால், இந்த கார் லிட்டருக்கு 25.96 கிமீ மைலேஜ் தரக்கூடியது.
மாருதி சுசூகி ஸ்விஃப்ட்: மாருதி சுசூகியின் புதிய ஸ்விஃப்ட் சிறந்த மைலேஜுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது மேனுவல் எடிஷனில் லிட்டருக்கு 24.80 கிமீ மைலேஜ் தரும். ஸ்விஃப்ட் ஆட்டோமேட்டிக் எடிஷனில் லிட்டருக்கு 25.75 கிமீ மைலேஜ் தரும். இதன் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 25.30 கி.மீ அகும்.
மாருதி சுசூகி வேகன் ஆர்: Maruti Suzuki Wagon R, நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மட்டுமின்றி, நல்ல மைலேஜையும் தரும் வாகனமாக உள்ளது. இதன் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் மூலம் லிட்டருக்கு 24.35 கிமீ மைலேஜ் தருகிறது. ஆட்டோமேட்டிக் எடிஷன் லிட்டருக்கு 25.19 கிமீ மைலேஜ் வழங்குகிறது. அதாவது சராசரியாக லிட்டருக்கு 24.77 கிமீ மைலேஜ் கிடைக்கும்.
Car loan Information:
Calculate Car Loan EMI