இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது ஹீரோ. இவர்களின் பல்வேறு பைக்குகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம். சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனமாக திகழ்வது Hero Xpulse. இந்த பைக் பற்றி கீழே விரிவாக காணலாம்.

Continues below advertisement

Hero Xpulse:

இந்த Hero Xpulse 200 4V பைக் இன்று இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும். இந்த பைக்கில் Hero Xpulse ஒரு 200 சிசி எஞ்ஜின் பைக் ஆகும். இந்த பைக்கில் மொத்தம் 3 வேரியண்ட்கள் உள்ளது.

1. Xpulse 200 4V Standard  - ரூபாய் 1 லட்சத்து 75 ஆயிரத்து 366

Continues below advertisement

2.  Xpulse 200 4V Pro Dakar Edition - ரூபாய் 1 லட்சத்து 87 ஆயிரத்து 766

3.Xpulse 200 4V Pro - ரூபாய் 1 லட்சத்து 88 ஆயிரத்து 790

மைலேஜ்:

இந்த Xpulse  பைக்கில் டிஸ்க் ப்ரேக் உள்ளது. ஸ்போக் சக்கரங்கள் உள்ளது. இந்த பைக்கின் முதல் வேரியண்ட் 159 கிலோ எடை கொண்டது. இந்த பைக்கின் மற்ற 2 வேரியண்ட்கள் 161 கிலோ எடை கொண்டது. இந்த பைக்கின் கருஞ்சிவப்பு, கருநீலம், கருவெள்ளை, கருநீலம், சாம்பல், வெண்சாம்பல் ஆகிய வண்ணங்களில் இந்த பைக் உள்ளது.

இந்த பைக்கில் 199.6 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 32.9 கிலோ மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 5 கியர்கள் இதில் உள்ளது. இதில் 13 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் உள்ளது. அதிகபட்சமாக 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

சிறப்புகள்:

1 கியர் கீழேயும், 4 கியர் மேலேவும் உள்ளது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் செய்தால் 428 கிலோமீட்டர் வரை செல்லலாம். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி கொண்டது. ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 21 இன்ச், பின்பக்கம் 18 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்ட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபரன்ட் ஃபோரக்ஸ் வித் ஆன்டி ப்ரிகஷன் புஷ், பின்பக்கம் ரெக்டாங்குலர் ஸ்விங்ஆர்ம் 10 ஸ்டெப் ப்ரீலோட் அட்ஜஸ்டலபிள் மோனோஷாக் சஸ்பென்சன் உள்ளது. 70 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருட வாரண்டி உள்ளது. 4 சர்வீஸ் வசதி உள்ளது.

வசதிகள்:

எல்இடி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் வசதி உள்ளது. மைலேஜ் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் வசதி டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட், லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹைபீம் இண்டிகேட்டர், எஞ்ஜின் டெம்பரேச்சர் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI