இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனம் ஹீரோ. இந்திய சாலைகளில் ஹீரோவின் வாகனங்கள் பலரும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 

Continues below advertisement

ஹீரோ நிறுவனத்தின் இளைஞர்களை கவர்ந்துள்ள இரு சக்கர வாகனமாக திகழ்வது Hero Xpulse 210. இதன் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம். 

விலை:

இந்த பைக்கில் 2 வேரியண்ட் உள்ளது.

Continues below advertisement

1. Xpulse 210 Base - ரூபாய் 1 லட்சத்து 99 ஆயிரத்து 654

2. Xpulse 210 Top - ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரத்து 161

இந்த Xpulse 210 பைக் வெள்ளை, சாம்பல் மற்றும் நீல நிறத்தில் உள்ளது. இதில் 210 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எடை 168 கிலோ ஆகும். இதன் இருக்கை 830 மி.மீட்டர் ஆகும். 20.7 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 24.2 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 

481 கி.மீட்டர் மைலேஜ்:

இதில் 6 கியர்கள் உள்ளது. 1 கியர் கீழேவும் 5 கியர் மேலேவும் உள்ளது. 37 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 481 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. ரோட், ஆஃப் ரோட் மற்றும் ரேலி மோட்கள் உள்ளது.

பிஎஸ்6 பாஸ் 2 எமிஷன் ஸ்டாண்டர்ட் எமிஷனில் உள்ளது.  சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 21 இன்ச் சக்கரமும், பின்பக்கம்  18 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது.  ட்யூப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

டெலிஸ்கோபிக் ப்ரன்ட் ஃபோர்க்ஸ் வித் 210 மி.மீட்டர் டிராவல் முன்பக்கம் சஸ்பென்சனும், பின்பக்கம் மோனோஷாக் அப்சார்பர் வித் 205 மி.மீட்டர் டிராவல் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மி.மீட்டர் ஆகும். 2.6 லிட்டர் ரிசர்வ்ட் ஆகும். 70 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருட வாகன வாரண்டி அளிக்கப்படுகிறது. 4.2 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது. 

மொபைல் போன் கனெக்ஷன் வசதி, ஜிபிஎஸ் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் வசதியில் உள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் ஆகும். டேகோமீட்டர் டிஜிட்டல் ஆகும். ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ ப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி, கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள், பகலிலே எரியும் விளக்குகள், ப்ரேக்/ டெயில் விளக்குகள் எல்இடி-யில் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI