இந்தியாவின் சாலைகளில் அதிகளவு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இரு சக்கர வாகனமாக ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் உள்ளது. 2004ம் ஆண்டு முதன் முதலாக ஹீரோ ஹோண்டாவின் ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அது வாகன சந்தையில் மிகப்பெரிய புரட்சியாகவே இருந்தது. மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக விற்பனை நடந்தது.
Splendor Plus:
அதன்பின்பு, எத்தனையோ மாடல்கள் வந்தாலும் ஸ்ப்ளண்டர் ப்ளசின் பெருமையை எந்த வாகனமும் தட்டிப்பறிக்க இயலவில்லை. மைலேஜ், தரம், பிக்கப் என்று பல வசதிகளை கொண்ட இந்த ஸ்ப்ளண்டர் ப்ளஸ் இன்றும் தற்போதைய காலகட்டத்திற்கு ஹீரோ ஸ்பளண்டர் ப்ளசாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஸ்ப்ளண்டர் ப்ளஸ் என்னென்ன வேரியண்டகளில் விற்பனையாகி வருகிறது? என்ன விலை? என்பதை கீழே காணலாம்.
தற்போது ஸ்ப்ளண்டர் ப்ளஸ் பேஸ் வேரியண்ட்களுடன் சேர்த்து 4 வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது.
1. Splendor Plus Black and Accent
2. Splendor Plus I3S
3. Splendor Plus Standard
இந்த வேரியண்ட்களில் ஸ்ப்ளண்டர் ப்ளஸ் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
70 கி.மீட்டர் மைலேஜ்:
இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மி.மீட்டர் ஆகும். பிஎஸ் 6 2.0 ரக வாகனம் இது ஆகும். ஸ்ப்ளண்டர் ப்ளஸின் அனைத்து வேரியண்ட்களிலும் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 97.2 சிசி திறன் கொண்டது ஆகும்.
ஸ்ப்ளண்டர் ப்ளஸ் நல்ல மைலேஜ் தரும் பைக் ஆகும். குடும்பஸ்தர்கள் அதிகம் இந்த பைக்கை விரும்புவதற்கு காரணம் இதன் மைலேஜ் ஆகும். ஸ்ப்ளண்டர் ப்ளஸ் 70 கி.மீட்டர் மைலேஜ் தருகிறது. 8.02 பிஎஸ் 8 ஆயிரம் ஆர்பிஎம் இழுதிறன் கொண்டது இதுவாகும்.
ஸ்ப்ளண்டர் ப்ளசின் பைக் டேங்க் 9.8 லிட்டர் பெட்ரோல் தாங்கும் திறன் கொண்டது ஆகும். தற்போதைய வசதிகளுக்கு ஏற்ப ஸ்ப்ளண்டர் ப்ளசில் ட்யூப்லஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கு 5 வருடம் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.
விலை என்ன? ( ஆன்ரோட் விலை)
Splendor Plus Black and Accent - ரூ. 98 ஆயிரத்து 428
Splendor Plus I3S - ரூ.98 ஆயிரத்து 428
Splendor Plus Standard - ரூ.93 ஆயிரத்து 715
சிறப்பம்சங்கள்:
ஹீரோ ஸ்பளண்டர் ப்ளசின் பேஸ் வேரியண்ட்டின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 75 ஆயிரத்து 441 ஆகும். ஆனால், இந்த வாகனத்தில் ஆட்டோமெட்டிக் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதி கிடையாது. Splendor Plus i3S Drum வேரியண்டில் இந்த வசதி உள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 76 ஆயிரத்து 786 ஆகும். Splendor Plus i3S Matt Axis Grey வேரியண்டின் விலை ரூபாய் 78 ஆயிரத்து 286 ( எக்ஸ் ஷோரூம்).
அன்று முதல் இன்று வரை ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் ஸ்ப்ளண்டர் ப்ளசின் தோற்றம் மாற்றப்படாமல் வேறு வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. கம்பைன்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் அளிக்கப்பட்டுள்ளது. ஏபிஸ் ப்ரேக் வசதி பொருத்தப்படவில்லை. 5 வருடம் அல்லது 70 ஆயிரம் கி.மீட்டர் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு உகந்தது:
4 கியர்கள் உள்ள பைக்காக இளைஞர்கள், முதியவர்கள், நடுத்தர வயது உள்ளவர்கள் ஓட்டுவதற்கு ஏற்ற வாகனமாக இந்த வாகனம் உள்ளது. ஹோண்டா ஷைன் 100, டிவிஎஸ் ரேடான், டிவிஎஸ் ஸ்போர்ட், ஹோண்டா சிடி 110 ட்ரீம், பஜாஜ் சிடி 110 எக்ஸ் ஆகிய வாகனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் ஸ்ப்ளண்டர் ப்ளஸ் வாகனம் உள்ளது.
இந்த வாகனம் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களிலும் மிகவும் உகந்த வாகனமாக உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI