2026ம் ஆண்டு பிறக்கப்போகிறது. பலரும் இந்த புது ஆண்டில் வாகனங்கள் வாங்க வேண்டும் என திட்டமிடுவார்கள். கார், பைக் என எதுவாக இருந்தாலும் எது சிறந்ததாக இருக்கும் என குழப்பம் இருக்கும். காரணம் ஆட்டோமொபைல் சந்தையில் பல நிறுவனங்களின் பைக், கார்கள் வந்து விட்டது. போதாத குறைக்கு மின்சார வாகனங்களும் களமிறங்கியுள்ளதால் பல குழப்பம் ஏற்படுகிறது. இப்படியான நிலையில் ஹீரோ ஸ்பிளெண்டர் vs டிவிஎஸ் ரேடியான் ஆகிய இரு பைக்குகளில் எது சிறந்தது என்பது பற்றி நாம் காணலாம்.
இதில் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மிக நீண்ட காலமாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெற்ற பைக்காக உள்ளது. அதாவது 100 சிசி இஞ்ஜின் திறன் கொண்ட பைக்குகளில் இதுதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேசமயம் டிவிஎஸ் ரேடியான் குறைந்த விலை மற்றும் நல்ல மைலேஜ் காரணமாக தற்சமயம் வாடிக்கையாளர்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருகிறது. ஆனால் இந்த இரண்டு பைக்குகளும் பட்ஜெட் விலையில் வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல சாய்ஸாக உள்ளது.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் ரூ.74,039 என்ற மதிபில் சென்னையில் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது, அதே நேரத்தில் டிவிஎஸ் ரேடியான் ரூ.67,700ல் தொடங்குகிறது. அதாவது டிவிஎஸ் ரேடியான் சுமார் ரூ.7,000 மலிவானது. பட்ஜெட்டில் பைக் வாங்குபவர்களுக்கு இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். குறைந்த விலை என்ற போதிலும், சிறப்பம்சங்கள் மற்றும் மைலேஜ் இரண்டிலும் ரேடியான் ஒரு வலுவான விருப்பமாக தனித்து நிற்கிறது.
ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கை பொறுத்தவரை அதில் Drum Brake - OBD 2B, Drum Brake I3S - OBD 2B, I3S - Black and Accent Edition - OBD 2B, Million Edition என 4 வகைகளில் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. டிவிஎஸ் ரேடியானில் முழு கருப்பு நிறம், டிரம், டிஜிட்டல் ட்ரம், டிஜிட்டல் டிஸ்க் என 4 வகைகளில் கிடைக்கிறது.
டிவிஎஸ் ரேடியானின் 109.7 சிசி எஞ்சின் திறன் கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ வரை செல்லும். ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் லிட்டருக்கு 70 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது. நகரங்களில் குறைந்தப்பட்சம் 62 கிலோ மீட்டர் வரை கிடைக்கும். அதேசமயம் TVS ரேடியான் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 73.68 கிமீ வரை இருக்கும். ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் அனலாக் மீட்டர், i3S சிஸ்டம் ஆகியவை கொண்டுள்ளது. முக்கியமான எடை குறைவான பைக் ஆகும். அதேசமயம் டிவிஎஸ் ரேடியானில் செமி டிஜிட்டல் கன்சோல், நிகழ்நேர மைலேஜ், யூஎஸ்பி சார்ஜிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் ஆகியவை இருக்கும்.
Car loan Information:
Calculate Car Loan EMI