இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனம் ஹீரோ. இவர்களது பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. ஹீரோவின் ஸ்கூட்டர்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது.

Continues below advertisement

ஹீரோவின் ஸ்கூட்டரில் மிகவும் முக்கியமானது Hero Pleasure Plus Xtec. இந்த ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே காணலாம். இந்த ஸ்கூட்டரில் மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளது.

1. Pleasure Plus Xtec Sports:

ஹீரோவின் Pleasure Plus Xtec Sports ஸ்கூட்டரின் விலை ரூபாய் 89 ஆயிரத்து 863. இதில் ட்ரம் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் நீலம்-மஞ்சள் கலந்த நிறத்தில் உள்ளது.

Continues below advertisement

2. Pleasure Plus Xtec ZX - Jubilant Yellow:

ஹீரோவின் Pleasure Plus Xtec ZX - Jubilant Yellow வேரியண்டின் விலை ரூபாய் 92 ஆயிரத்து 133.  ட்ரம் ப்ரேக்ஸ் மற்றும் அலாய் சக்கரங்கள பொருத்தப்பட்டுள்ளது. இது மஞ்சள் நிறத்தில் உள்ளது.

3. Pleasure Plus Xtec ZX - OBD 2B:

இந்த Pleasure Plus Xtec ZX - OBD 2B வேரியண்டின் விலை ரூபாய் 93 ஆயிரத்து 210 ஆகும் இதில் ட்ரம் ப்ரேக்ஸ் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. நீலம், மஞ்சள், கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இந்த ஸ்கூட்டர் உள்ளது. 

4. Pleasure Plus Xtec Connected:

இந்த Pleasure Plus Xtec Connected வேரியண்டின் விலை ரூபாய் 95 ஆயிரத்து 470 ஆகும். இதில் ட்ரம் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் கருப்பு மற்றும் நீல நிறத்தில் உள்ளது.

மைலேஜ்:

இந்த ஸ்கூட்டர் 110.9 சிசி திறன் கொண்டது. இது லிட்டருக்கு 50 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.  இதன் எடை 106 கிலோ ஆகும். இதில் 4.8 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் உள்ளது. 8 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது.

இதன் 110 சிசி திறன் எஞ்ஜின் சிறப்பாக செயல்டுகிறது.  இதன் ப்ரேக்குகளும் மிகவும் செளகரியமாகவே உள்ளது. எடையும் மிகவும் இலகுவானதாக இருப்பதால் பெண்கள், முதியவர்களும் ஓட்டுவதற்கு ஏதுவாக உள்ளது. 8.7 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

சிறப்புகள்:

சிவிடி ரக எஞ்ஜின் ஆகும். ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 240 கிலோமீட்டர் வரை செல்லலாம். 1 சிலிண்டர் ஏர்கூல்ட், 2 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் 10 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. 

பாட்டம் லிங்க் வித் ஸ்ப்ரிங் லோடட் ஹைட்ராலிக் டேம்பர் சஸ்பென்சன் முன்பக்கமும், ஸ்விங் ஆர்ம் வித் ஸ்ப்ரிங் லோடட் ஹைட்ராலிக் டேம்பர்ஸ் பின்பக்கமும் பின்பக்கமும் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. 50 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருட வாரண்டி பொருத்தப்பட்டுள்ளது. செமி டிஜிட்டல் வசதி கொண்டது. 

ப்ளூடூத் வசதி கொண்டது. ஜிபிஎஸ், நேவிகேஷன் வசதி இல்லை. டிஜிட்டல் ஓடோமீட்டர் வசதி கொண்டது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் வசதி கொண்டது. ஸ்டாண்ட் அலார்ம் பொருத்தப்பட்டுள்ளது. லோ ப்யூல் இண்டிகேட்டர் வசதி கொண்டது. ஹைபீம் இண்டிகேட்டர் உள்ளது. கால்/எஸ்எம்எஸ் வசதி அலார்ம் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஆட்டோமெட்டிக் ஸ்டார்ட் ஸ்டாப் வசதி உள்ளது. எல்இடி ப்ராஜெக்ட் ஹெட்லாம்ப் வசதி உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI