இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், தனது பிரபலமான ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) மாடலின் கேன்வாஸ் பிளாக் (Canvas Black) எடிஷனின் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது.

Continues below advertisement

விலை விவரங்கள் 

பண்டிகை கால மற்றும் விற்பனை சலுகையாக, இந்த பைக்கின் விலையில் ரூ.7,635 குறைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி விலை குறைப்பிற்குப் பிறகு, ஹெச்.எஃப் டீலக்ஸ் கேன்வாஸ் பிளாக் எடிஷனின் ஆரம்ப விலை ரூ.59,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதன் விலை 67,634 ரூபாயாக இருந்தது.

Continues below advertisement

இருப்பினும், இந்த சலுகை தற்போதைக்கு நாடு முழுவதும் கிடையாது. டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 4 மாநிலங்களில் மட்டுமே இந்த விலை குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுக்கு உண்டா என்பது குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.

வடிவமைப்பு 

பெயருக்கேற்ப இந்த கேன்வாஸ் பிளாக் எடிஷன் பைக், முழுமையான கருப்பு நிற தீமில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக்கின் இன்ஜின், அலாய் வீல்கள், எக்ஸாஸ்ட், மற்றும் அனைத்து பாடி பேனல்களும் கருப்பு நிறத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் டேங்கில் வழங்கப்பட்டுள்ள 3D ஹீரோ லோகோ, பைக்கிற்கு பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை அளிக்கிறது. ஹாலோஜன் ஹெட்லேம்ப் மற்றும் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

இன்ஜின் மற்றும் பாதுகாப்பு

இந்த பைக்கில் 97.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.02 PS பவரையும், 8.05 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்களும் சஸ்பென்ஷன் பணியை கவனிக்கின்றன.

சூப்பர் மைலேஜ்

இந்த பைக்கின் மிக முக்கிய சிறப்பம்சம் இதன் எரிபொருள் சிக்கனம்தான். இதில் ஹீரோ நிறுவனத்தின் பிரத்யேக i3S தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. டிராஃபிக்கில் வண்டி நிற்கும்போது இன்ஜின் தானாகவே ஆஃப் ஆகி எரிபொருளை மிச்சப்படுத்தும். இதன் காரணமாக, இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 65 முதல் 70 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக உள்ளது.

நடுத்தர மக்களின் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனமாக இருக்கும் இந்த மாடல், தற்போதைய விலை குறைப்பின் மூலம் மேலும் பல வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI