இந்தியாவில் பைக் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது ஹீரோ நிறுவனமே ஆகும். இவர்களது பல்வேறு பைக்குகள் இந்திய சந்தையில் சக்கைப் போடு போட்டு வருகிறது. இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்காகவும் ஹீரோ வாகனங்கள் சந்தையில் விற்பனையாகி வருகிறது.

Continues below advertisement

HF Deluxe:

அந்த வகையில், இந்தியாவில் அவர்கள் அறிமுகப்படுத்திய பைக் Hero HF Deluxe ஆகும். இந்த பைக்கின் தொடக்க விலை ரூபாய் 70 ஆயிரத்து 804 ஆகும். இந்த பைக்கின் டாப் வேரியண்ட் ரூபாய் 85 ஆயிரத்து 725 ஆகும்.  இந்த பைக்கில் மொத்தம் 6 வேரியண்ட்கள் உள்ளது. எந்த வேரியண்ட்? என்னென்ன விலை? என்பதை கீழே காணலாம்.

வேரியண்ட்களும், விலையும்:

1. HF Deluxe HF 100 - ரூபாய் 70 ஆயிரத்து 804

Continues below advertisement

2.HF Deluxe Kick Alloy - ரூபாய் 74 ஆயிரத்து 368

3. HF Deluxe Self Alloy - ரூபாய் 78 ஆயிரத்து 726

4. HF Deluxe All Black - ரூபாய் 81 ஆயிரத்து 837

5. HF Deluxe I3S Alloy - ரூபாய் 82 ஆயிரத்து 349

6.  HF Deluxe I3S Pro - ரூபாய் 85 ஆயிரத்து 725

மைலேஜ்:

முதல் 2 வேரியண்ட் தவிர மற்ற 4 வேரியண்ட்களும் 112 கிலோ எடை கொண்டது. முதல் 2 வேரியண்ட்கள் 110 கிலோ எடை கொண்டது. இந்த பைக்குகளில் ட்ரம் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் உள்ளது. ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

அனைத்து வேரியண்ட்களிலும் செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. 97.2 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 65 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 4 கியர்கள் உள்ளது. இதில், 9.1 லிட்டர் பெட்ரோல் தாங்கும் திறன் கொண்ட டேங்கர் உள்ளது. மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. 

சவால்:

இந்த பைக் பார்ப்பதற்கு ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் வடிவத்தில் இருப்பது இதன் சிறப்பம்சமாக உள்ளது. இந்த இரு சக்கர வாகனத்தில் டிஸ்க் ப்ரேக் இல்லாதது குறையாக கருதப்படுகிறது. இந்த பைக்கின் டாப் வேரியண்ட் HF Deluxe I3S Pro எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்ட பைக் ஆகும். 

இந்த பைக் பஜாஜ் நிறுவனத்தின் CT100, டிவிஎஸ் நிறுவனத்தின் Sport ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக உள்ளது.  முதல் 500 முதல் 750 கிலோமீட்டர் வரையில் முதல் சர்வீசும், 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 கி.மீட்டர் வரை 2வது சர்வீசும், 6 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 500 கி.மீட்டர் வரையிலும் 3வது சர்வீசும் பார்க்க வேண்டும். 

ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. சக்கரங்கள் 18 இன்ச் கொண்டது. ட்யூப்லெஸ் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 5 வருடங்கள் வாரண்டி உள்ளது. 70 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. இந்த HF Deluxe பைக் கருஞ்சிவப்பு, கருநீலம், வெண்கருப்பு, கருப்பு, கருப்பு மஞ்சள் என பல வண்ணங்களில் உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI