இந்தியாவில் இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஹீரோ. இவர்களது பைக் மற்றும் ஸ்கூட்டருக்கு என்று இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஸ்கூட்டரிலும் ஹீரோவின் Hero Destini ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

Continues below advertisement

Destini Prime:

இந்த நிலையில், Hero Destini Prime ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம். 

ஹீரோவின் Hero Destini Prime ஸ்கூட்டரில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. Destini Prime Standard - OBD 2B என்ற இந்த வேரியண்டின் விலை ரூபாய் 96 ஆயிரத்து 529 ஆகும். இந்த ஸ்கூட்டரில் 124.6 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 

Continues below advertisement

மைலேஜ்:

இது 49 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இதன் டேங்கர் 5 லிட்டர் பெட்ரோல் தாங்கும் திறன் கொண்டது. 9 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் 119 கிலோ எடை கொண்டது. 

கருப்பு, நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர் உள்ளது. இதன் தோற்றம் ஆக்டிவா, ஜுபிடர் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு நிகராக உள்ளது. 7 ஆயிரம் ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. 10.36 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

சிறப்புகள்:

ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 245 கிலோமீட்டர் வரை செல்லலாம். பெட்ரோலில் ஓடும் இந்த Destini Prime ஸ்கூட்டரில் ட்ரம் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

சிங்கிள் காய்ல் ஸ்ப்ரிங் ஹைட்ராலிக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 50 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடங்கள் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ்ட்டில் 1.8 லிட்டர் வரை செல்லும். ஸ்டாண்ட் அலார்ம் வசதி உள்ளது. தொழில்நுட்பக் கோளாறை சுட்டிக்காட்டும் மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர் விருப்பம்:

கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. இதன் தோற்றமும், மைலேஜும், விலையும் வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதால் பெரும்பாலாேனோர் இதை விரும்பி வாங்குகின்றனர். அலாய் சக்கரங்கள் இல்லாதது ஒரு பின்னடைவாக உள்ளது.

Hero Destini Prime ஸ்கூட்டர் Hero Destini 125, Hero Destini 110 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு நிகராக இந்த ஸ்கூட்டரும் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டருக்கு வாடிக்கையாளர்கள் 5க்கு 4.6 ஸ்டார் வழங்கியுள்ளனர்.

 


Car loan Information:

Calculate Car Loan EMI