GST Reforms on Automobile Industry: புதிய ஜிஎஸ்டி வரி திருத்தத்தில், பிரபலமான பல கார் மாடல்களின் மீது அதிகபட்சமாக 40 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.
சப் 4 மீட்டர் எஸ்யுவிக்களுக்கு ஜாக்பாட்
மத்திய அரசு புதிய ஜிஎஸ்டி வரி திருத்தத்தை அறிவித்துள்ளது. அதன்படி, 1200சிசி செயல்திறன் அல்லது 4000 மிமீ நீளத்திற்கு மிகாத பெட்ரோல், பெட்ரோல் ஹைப்ரிட், எல்பிஜி, சிஎன்ஜி கார்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 1500சிசி செயல்திறன் அல்லது 4000 மிமீ நீளத்திற்கு மிகாத கார்கள் டீசல், டீசல் ஹைப்ரிட் கார்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
செடான், ஹேட்ச்பேக்கிற்கு பம்பர் பரிசு:
புதிய அறிவிப்பின்படி, செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார் மாடல்கள் மீதான வரியில் 10 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் மூலம் எண்ட்ரி லெவல் கார்களான ஆல்டோ கே10, மாருதி எஸ் ப்ரெஸ்ஸோ, ரெனால்ட் க்விட் மற்றும்டாடா டியாகோ தொடங்கி, நடுத்தர மக்களின் தேர்வாக உள்ள ஸ்விஃப்ட், எக்ஸ்டெர், டிசையர் போன்ற கார் மாடல்களின் விலை கணிசமாக குறைய உள்ளது. குறைந்த விலையில் நல்ல காரை வாங்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல முடிவாக இருக்கும்.
இனி எஸ்யுவி வாங்குவது சுலபம்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி கார்களுக்கான தேவை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால்,அவற்றின் விலை சிலருக்கு எட்டாக்கணியாக இருக்கலாம். இந்நிலையில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பின் மூலம், இனி எஸ்யுவி வாங்குவது எளிதாக உள்ளது. குறிப்பாக சப்-4 மீட்டர் எனப்படும் 4 ஆயிரம் மில்லி மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யுவி கார்களின் விலை கணிசமாக குறைய உள்ளது.
உதாரணமாக, மாருதி ப்ரேஸ்ஸா, மாருதி ஃப்ரான்க்ஸ், டாடா நெக்ஸான், டாடா பஞ்ச், மஹிந்த்ரா தார், ஹுண்டாய் வென்யு, கியா சோனெட், மஹிந்த்ராவின் XUV 3XO, ஹுண்டாய் எக்ஸ்டெர், ஸ்கோடா கைலாக், டொயோட்டா டைசர், நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் கியா சைரோஸ் ஆகிய சப்-4 மீட்டர் எஸ்யுவிக்களின் விலை கணிசமாக குறைய உள்ளது.
40% வரியை எதிர்கொள்ளும் பிரபல கார்கள்:
அதேநேரம், மத்திய அரசின் அறிவிப்பின்படி 1200cc க்கு அதிகமான திறன் அல்லது 4000 mm க்கு மேல் நீளம் கொண்ட பெட்ரோல் அல்லது பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின்கள் கொண்ட கார்களுக்கு 40 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 1500cc-க்கு அதிகமான திறன் அல்லது 4000 mm க்கு மேல் நீளம் கொண்ட டீசல் அல்லது டீசல் ஹைப்ரிட் கார்களுக்கும் 40 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெகுஜன சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள பல கார்களின் விற்பனையை வெகுவாக பாதிக்கும் என கருதப்படுகிறது.
க்ரேட்டாவிற்கு ஆப்பு?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள காம்பேக்ட் எஸ்யுவி ஆன க்ரேட்டா, புதிய வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கு என கூறப்படுகிறது. காரணம் இந்த காரின் நீளம் சுமார் 4 ஆயிரத்து 330 மில்லி மீட்டர் ஆக இருப்பதால், இனி 40 சதவிகித வரியை எதிர்கொள்ள உள்ளது. இது காரின் விலையை கடுமையாக ஏற்றக்கூடும். இதேபோன்று, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷக் ஃபோக்ஸ்வாகன் டைகன் ஆகிய எஸ்யுவிக்களின் விலை மேலும் 12 சதவிகித உயர்வை காண உள்ளது.
ப்ரீமியம் கார்களுக்கு பலத்த அடி
இதனிடையே, ஹோண்டா சிட்டி, மாருதி சுசூகி சியாஸ், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வாகன் விர்டஸ் ஆகிய செடான்களின் விலையும், மாருதி சுசூகி எர்டிகா மற்றும் கியா காரென்ஸ் ஆகிய எம்பிவி வாகனங்களின் விலையும் உயர உள்ளது.
மேலும் டாடா, மஹிந்த்ரா, எம்ஜி, ஹுண்டாய், ஸ்கோடா மற்றும் டொயோட்டா ஆகிய ப்ராண்ட்களின் பெரிய கார்கள் மீதும் இனி 40 சதவிகித வரி வசூலிக்கப்பட உள்ளது. ஆடி, பிஎம்டபள்யூ மற்றும் பென்ஸ் போன்ற ப்ரீமியம் கார் நிறுவனங்களின் பல மாடல்கள் இந்த பிரிவில் தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பைக் சந்தை நிலவரம் என்ன?
350 சிசி மற்றும் அதற்கும் குறைவான திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான வரி 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் எண்ட்ரி லெவல், மைலேஜ் சார்ந்த மற்றும் மிதமான செயல்திறன் கொண்ட பைக்குகளின் விலை கணிசமாக குறைய உள்ளது. ஒரு சில செயல்திறன் சார்ந்த பைக்குகளின் விலையும் சரிந்து அணுகல் எளிதாக உள்ளது. உதாரணமாக ராயல் என்ஃபீல்டின் க்ளாசிக் 350, ஹண்டர் 350, மீடியோர் 350, புல்லட் 350, ஹோண்டா ஹார்னெஸ் CB350, யமாஹா MT-15 மற்றும் R15 ஆகிய மோட்டார்சைக்கிள்களின் விலை 10 சதவிகிதம் வரை குறைய உள்ளது.
ராயல் என்ஃபீல்ட் கதை ஓவர்?
அதேநேரம், 350 சிசிக்கும் அதிகமான திறன் கொண்ட மோட்டர் சைக்கிள்கள் மீது இனி 40 சதவிகித வரியை எதிர்கொள்ள உள்ளது. இதன் மூலம் இதுநாள் வரை சற்றே மலிவு விலையில் கிடைத்த வந்த சில சொகுசு மோட்டார் சைக்கிள்கள் இனி கூடுதல் விலையை எட்ட உள்ளது. அதன்படி, ஹார்லி டேவிட்சன் X440, ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450, ட்ரையம்ப் ஸ்பீட் 400, கவாசகி Z900, மற்றும் ராயல் என்ஃபீல்டின் Continental GT 650 ஆகிய மாடல்கள் விலையுயர்ந்தவையாக மாற உள்ளன. குறிப்பாக ராயல் என்ஃபீல்டின் பல ப்ரீமியம் பைக்குகள் இந்த செக்மெண்டில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தகக்து. இதனால், கூடுதல் வரி விதிப்பால் நிறுவனத்தின் விற்பனை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI