ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு மாற்றி அமைத்த பிறகு நாட்டில் பல பொருட்களின் விலை குறைந்தது. 28 சதவீத ஜிஎஸ்டி வரியில் இருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு கார்களின் விலை தாறுமாறாக குறைந்துள்ளது. சுமார் 1 லட்சம் வரை கார்களின் விலை குறைந்துள்ளது.
சரிந்த ரெனால்ட் காரின் விலை:
டாடா நிறுவனம் தனது புதிய விலையை அறிவித்துள்ள நிலையில், ரெனால்ட் நிறுவனம் தனது Renault Kiger கார்களுக்கு விலையை குறைத்துள்ளது. 15 வேரியண்ட்களின் பழைய விலை மற்றும் புதிய விலை , எவ்வளவு குறைவு? என்பதை கீழே காணலாம்.
எவ்வளவு குறைவு?
1. Authentic MT - ரூபாய் 53 ஆயிரத்து 695
2. Evolution MT - ரூ.60 ஆயிரத்து 495
3. Evolution AMT - ரூ. 64 ஆயிரத்து 795
4. Techno MT - ரூ. 69 ஆயிரத்து 895
5. Techno DT MT - ரூ.71 ஆயிரத்து 895
6. Emotion MT - ரூ. 77 ஆயிரத்து 995
7. Emotion DT MT - ரூ.79 ஆயிரத்து 995
8. Techno AMT - ரூ.74 ஆயிரத்து 195
9. Techno DT AMT - ரூ.76 ஆயிரத்து 195
10. Emotion MT 1.0L T - ரூ.85 ஆயிரத்து 295
11. Emotion DT MT 1.0L T - 85 ஆயிரத்து 295
12. Techno CVT 1.0L T - 85 ஆயிரத்து 295
13. Emotion CVT 1.0L T - 96 ஆயிரத்து 395
14. Emotion DT CVT 1.0L T - 96 ஆயிரத்து 395
ரெனால்ட் நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
1. Authentic MT:
ரெனால்ட் நிறுவனத்தின் Authentic MT காரின் பழைய விலை ரூபாய் 6 லட்சத்து 29 ஆயிரத்து 995. ஜிஎஸ்டி வரிக்கு பிறகு புதிய விலை ரூபாய் 5 லட்சத்து 76 ஆயிரத்து 300 ஆகும். 53 ஆயிரத்து 695 ரூபாய் குறைந்துள்ளது.
2. Evolution MT:
ரெனால்ட்டின Evolution MT காரின் பழைய விலை ரூபாய் 7 லட்சத்து 9 ஆயிரத்து 995 ஆகும். தற்போது 60 ஆயிரத்து 495 ரூபாய் குறைக்கப்பட்டு ரூபாய் 6 லட்சத்து 49 ஆயிரத்து 500க்கு விற்கப்பட உள்ளது.
3. Evolution AMT:
Evolution AMT காரின் பழைய விலை ரூபாய் 7 லட்சத்து 59 ஆயிரத்து 995 ஆகும். இதன் புதிய விலை ரூபாய் 6 லட்சத்து 95 ஆயிரத்து 200 ஆகும். ஜிஎஸ்டி வரிக்கு பிறகு 64 ஆயிரத்து 795 குறைந்துள்ளது.
4.Techno MT:
ரெனால்டில் Techno MT காரின் பழைய விலை ரூபாய் 8 லட்சத்து 19 ஆயிரத்து 995 ஆகும். புதிய விலை ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரத்து 100 ஆகும். தற்போது ரூபாய் 69 ஆயிரத்து 895 குறைந்துள்ளது.
5.Techno DT MT:
இந்த Techno DT MT காரின் பழைய விலை ரூபாய் 8 லட்சத்து 42 ஆயிரத்து 995 ஆகும். புதிய விலை ரூபாய் 7 லட்சத்து 71 ஆயிரத்து 100 ஆகும். இந்த காரின் விலை தற்போது ரூபாய் 71 ஆயிரத்து 895 குறைக்கப்பட்டுள்ளது.
6. Emotion MT:
இந்த Emotion MT காரின் பழைய விலை ரூபாய் 9 லட்சத்து 14 ஆயிரத்து 995 ஆகும். இந்த கார் தற்போது 77 ஆயிரத்து 995 குறைக்கப்பட்டு ரூபாய் 8 லட்சத்து 37 ஆயிரத்திற்கு விற்கப்பட உள்ளது.
7. Emotion DT MT:
ரெனால்ட் நிறுவனத்தின் Emotion DT MT-யின் பழைய விலை ரூபாய் 9 லட்சத்து 37 ஆயிரத்து 995 ஆகும். இந்த காரின் புதிய விலை ரூபாய் 8 லட்சத்து 58 ஆயிரம் ஆகும். 79 ஆயிரத்து 995 ரூபாய் இந்த காரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
8. Techno AMT:
ரெனால்டின் Techno AMT காரின் பழைய விலை ரூபாய் 8 லட்சத்து 69 ஆயிரத்து 995 ஆகும். தற்போது 74 ஆயிரத்து 195 குறைக்கப்பட்டு இனி 7 லட்சத்து 95 ஆயிரத்து 800க்கு விற்கப்பட உள்ளது.
9. Techno DT AMT:
Techno DT AMT காரின் புதிய விலை ரூபாய் 8 லட்சத்து 16 ஆயிரத்து 800 ஆகும். இதன் பழைய விலை ரூபாய் 8 லட்சத்து 92 ஆயிரத்து 995 ஆகும். தற்போது இந்த கார் ரூபாய் 76 ஆயிரத்து 195 குறைந்துள்ளது.
10. Emotion MT 1.0L T:
ரெனால்ட் நிறுவனத்தின் Emotion MT 1.0L T காரின் பழைய விலை ரூபாய் 9 லட்சத்து 99 ஆயிரத்து 995 ஆகும். இந்த காரின் புதிய விலை ரூபாய் 9 லட்சத்து 14 ஆயிரத்து 700 ஆகும். இந்த கார் தற்போது 85 ஆயிரத்து 295 குறைக்கப்பட்டுள்ளது.
11. Emotion DT MT 1.0L T:
Emotion DT MT 1.0L T இந்த காரின் புதிய விலை 9 லட்சத்து 14 ஆயிரத்து 700 ஆகும். பழைய விலை 9 லட்சத்து 99 ஆயிரத்து 995 ரூபாய் ஆகும்.புதிய ஜிஎஸ்டி வரிக்கு பிறகு 85 ஆயிரத்து 295 சரிந்துள்ளது.
12. Techno CVT 1.0L T:
ரெனால்டின் Techno CVT 1.0L T காரின் பழைய விலை ரூபாய் 9 லட்சத்து 99 ஆயிரத்து 995 ஆகும். தற்போது ரூபாய் 85 ஆயிரத்து 295 குறைக்கப்பட்டு ரூபாய் 9 லட்சத்து 14 ஆயிரத்து 700க்கு விற்கப்பட உள்ளது.
13. Techno DT CVT 1.0L T:
ரெனால்ட் நிறுவனத்தின் Techno DT CVT 1.0L T காரின் பழைய விலை ரூபாய் 9 லட்சத்து 99 ஆயிரத்து 995 ஆகும். இந்த காரின் புதிய விலை ரூபாய் 9 லட்சத்து 14 ஆயிரத்து 700 ஆகும். இந்த கார் விை ரூபாய் 85 ஆயிரத்து 295 குறைந்துள்ளது.
14. Emotion CVT 1.0L T:
இந்த Emotion CVT 1.0L T காரின் விலை ரூபாய் 11 லட்சத்து 29 ஆயிரத்து 995 ஆகும். இந்த கார் ரூபாய் 96 ஆயிரத்து 395 குறைந்து ரூபாய் 10 லட்சத்து 33 ஆயிரத்து 600க்கு விற்கப்படுகிறது.
15. Emotion DT CVT 1.0L T:
இந்த Emotion DT CVT 1.0L T காரின் விலை ரூபாய் 11 லட்சத்து 29 ஆயிரத்து 995 ஆகும். இந்த காரும் ரூபாய் 96 ஆயிரத்து 395 குறைந்து ரூபாய் 10 லட்சத்து 33 ஆயிரத்து 600க்கு விற்கப்பட உள்ளது.
ரெனால்டின் இந்த கார் விலை குறைப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI