ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக இந்தியாவில் ஏராளமான பொருட்களின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக, ஆட்டோமொபைல் சந்தையில் மிகப்பெரிய விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டர்களின் விலையை குறைத்துள்ளது.
டிவிஎஸ்-சின் எந்த ஸ்கூட்டர் மற்றும் பைக் எவ்வளவு விலை குறைந்துள்ளது? என்பதை காணலாம்.
1. TVS Jupiter 110 - ரூபாய் 6,481
2. TVS Jupiter 125 - ரூ.6, 795
3. TVS NTORQ 125 - ரூ.7,242
4. TVS NTORQ 150 - ரூ.9,600
5. TVS XL 100 - ரூ.3,854
6. TVS Radeon - ரூ.4,850
7. TVS Sport - ரூ.8,440
8. TVS Star City - ரூ.6,386
9. TVS Raider - ரூ.7,575
10. TVS Zest - ரூ.6,291
1. TVS Jupiter 110:
டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு இந்த TVS Jupiter 110. இதன் பழைய விலை ரூபாய் 78 ஆயிரத்து 881 ஆகும். தற்போது ரூபாய் 6 ஆயிரத்து 481 ஆகும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இதன் புதிய விலை ரூபாய் 72 ஆயிரத்து 400 ஆகும். இது 113.3 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் ஆகும்.
2. TVS Jupiter 125:
டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு TVS Jupiter 125 ஆகும். இந்த ஸ்கூட்டரின் பழைய விலை ரூபாய் 82 ஆயிரத்து 395 ஆகும். ஜிஎஸ்டி வரி குறைப்பால் இதன் விலை ரூபாய் 6 ஆயிரத்து 795 குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் புதிய விலை ரூபாய் 75 ஆயிரத்து 600 ஆகும்.
3. TVS NTORQ 125:
இந்திய சந்தையில் பலரிடமும் வரவேற்பை பெற்று வரும் ஸ்கூட்டர் இந்த TVS NTORQ 125 ஆகும். இதன் பழைய விலை ரூபாய் 88 ஆயிரத்து 142 ஆகும். இந்த ஸ்கூட்டர் ரூபாய் 7 ஆயிரத்து 242 விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய விலை ரூபாய் 80 ஆயிரத்து 900 ஆகும்.
4. TVS NTORQ 150:
இந்த TVS NTORQ 150 பழைய விலை ரூபாய் 1 லட்சத்து 19 ஆயிரம் ஆகும். இதன் விலை ரூபாய் 9 ஆயிரத்து 600 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இதன் புதிய விலை ரூபாய் 1 லட்சத்து 9 ஆயிரத்து 400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5.TVS XL 100:
டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று டிவிஎஸ் எக்ஸ்எல் ஸ்கூட்டரின் TVS XL 100 ஆகும். இதன் பழைய விலை ரூபாய் 47 ஆயிரத்து 754 ஆகும். இது ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 3 ஆயிரத்து 854 ஆகும். இதன் புதிய விலை ரூபாய் 43 ஆயிரத்து 900 ஆகும்.
6. TVS Radeon:
டிவிஎஸ்சின் இந்த TVS Radeon பைக்கின் தொடக்க விலை ரூபாய் 59 ஆயிரத்து 950 ஆக இருந்தது. ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் இதன் விலை ரூபாய் 4 ஆயிரத்து 850 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ரூபாய் 55 ஆயிரத்து 100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7. TVS Sport:
டிவிஎஸ் நிறுவனத்தின் பைக் இந்த TVS Sport ஆகும். இதன் பழைய விலை ரூபாய் 59 ஆயிரத்து 590 ஆகும். இதன் விலை ரூபாய் 8 ஆயிரத்து 440 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பைக்கின் தொடக்க விலை ரூபாய் 51 ஆயிரத்து 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
8. TVS Star City:
டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான பைக் இந்த TVS Star City ஆகும். இதன் தொடக்க விலை ரூபாய் 78 ஆயிரத்து 586 ஆகும். ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் இதன் விலை ரூபாய் 6 ஆயிரத்து 386 குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ரூபாய் 72 ஆயிரத்து 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
9. TVS Raider:
டிவிஎஸ் நிறுவனத்தின் TVS Raider பைக்கின் பழைய தொடக்க விலை ரூபாய் 87 ஆயிரத்து 625 ஆக இருந்தது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 7 ஆயிரத்து 575 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இதன் புதிய விலை ரூபாய் 80 ஆயிரத்து 050 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
10. TVS Zest:
டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர்களில் ஒன்று TVS Zest ஆகும். இதன் பழைய விலை ரூபாய் 76 ஆயிரத்து 981 ஆகும். ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் ரூபாய் 6 ஆயிரத்து 291 குறைந்துள்ளது. இதனால், இதன் புதிய தொடக்க விலை ரூபாய் 70 ஆயிரத்து 600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI