Kia Car Price: ஆத்தாடி.. ரூபாய் 4.50 லட்சம் வரை நிரந்தர தள்ளுபடி - கார் விலையை குறைத்த Kia
ஜிஎஸ்டி வரி மாற்றத்திற்கு பிறகு கியா நிறுவனம் தங்களது காரின் விலையை ரூபாய் 4.48 லட்சம் வரை குறைத்துள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பின் காரணமாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரிய மாற்றம் உருவாகியுள்ளது. கார்களின் விலை தாறுமாறாக குறைந்துள்ளது. டாடா, ஹுண்டாய், மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை தாறுமாறாக குறைத்தது. இதைத்தொடர்ந்து, கியா நிறுவனமும் தங்களது கார்களின் விலையை குறைத்துள்ளது.
கியா நிறுவனத்தின் எந்த காரின் விலை எந்தளவு குறைந்துள்ளது? என்பதை கீழே காணலாம்.
1. Kia Sonet - ரூபாய் 1 லட்சத்து 64 லட்சத்து 471
2. Kia Syros - ரூபாய் 1 லட்சத்து 86 ஆயிரத்து 003
3. Kia Seltos - ரூபாய் 75 ஆயிரத்து 372
4. Kia Carens - ரூபாய் 48 ஆயிரத்து 513
5. Kia Carens Clavis - ரூபாய் 78 ஆயிரத்து 674
6. Kia Carnival - ரூபாய் 4 லட்சத்து 48 ஆயிரத்து 542
1. Kia Sonet:
கியா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் Kia Sonet ஒன்றாகும். இதன் தொடக்க விலை ரூபாய் 7.99 லட்சம் ஆகும். இதன் விலை ரூபாய் 1,64, 761 ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இந்த காரின் விலை ரூபாய் 6.50 லட்சத்திற்கு விற்கப்பட உள்ளது.
998 சிசி முதல் 1493 சிசி வரை திறன் கொண்ட எஞ்ஜின் கொண்டது இந்த கார். 6 ஏர்பேக்குகள் இதில் கொண்டது ஆகும். முன் டயர்கள் டிஸ்க் ப்ரேக் கொண்டது.
2. Kia Syros:
கியா நிறுவனத்தின் Kia Syros காரின் விலை ரூபாய் 9.49 லட்சம் ஆகும். எஸ்யூவி ரக காரான இந்த காரின் விலை அதிகபட்சமாக ரூபாய் 1 லட்சத்து 86 ஆயிரத்து 003 வரை குறையும் வாய்ப்பு உள்ளது. 5 ஸ்டார் பாதுகாப்பு அம்சம் கொண்ட இந்த காரில் 6 ஏர்பேக்குகள் உள்ளது. 998 சிசி திறன் கொண்ட எஞ்ஜினும், 1493 சிசி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினும் உள்ளது. Kia Syros கார் லிட்டருக்கு 17.65 கி.மீட்டரும், 20.75 கி.மீட்டரும் மைலேஜ் தருகிறது.
3. Kia Seltos:
கியோ நிறுவனத்தின் Kia Seltos காரின் இந்த தொடக்க விலை ரூபாய் 11.89 லட்சம் ஆகும். இந்த கார் ரூபாய் 75 ஆயிரத்து 372 வரை குறைய உள்ளது. எஸ்யூவி ரக காரான இந்த கார் 6 ஏர்பேக்குள் கொண்டது. சன்ரூஃப் வசதி உள்ளது. Smartstream G1.5 6MT மற்றும் 1.5l CRDi VGT 6MT எஞ்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் இந்த கார் உள்ளது.
இந்த கார் 1497 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் மற்றும் 1482 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட காராக உள்ளது. டீசல் எஞ்ஜின் 1493 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட காராகவும் உள்ளது.
4. Kia Carens:
கியா நிறுவனத்தின் Kia Carens காரின் விலை ரூபாய் 48 ஆயிரத்து 513 வரை குறைய உள்ளது. இந்த காரின் தற்போதைய விலை 11.49 லட்சம் ஆகும். 7 சீட்டர் வசதி கொண்ட இந்த கார் 6 ஏர்பேக்குகள் கொண்டது ஆகும். 360 டிகிரி கேமரா கொண்ட இந்த காரில் எலக்ட்ரானிக் ஸ்டபிளிட்டி சிஸ்டம், மலைப்பிரதேசத்தில் செல்வதற்கு ப்ரேக் கன்ட்ரோல் வசதி உள்ளது. 1493 சிசி திறன் கொண்ட டீசல் எஞ்ஜின் மற்றும் 1497 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்ஜினும் பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது.
5. Kia Carens Clavis:
கியா நிறுவனத்தின் Kia Carens Clavis காரின் தற்போதைய விலை ரூபாய் 11.49 லட்சம் ஆகும். இந்த கார் தற்போது 78 ஆயிரத்து 674 ரூபாய் குறைய உள்ளது. இந்த காரில் 360 டிகிரி கேமரா உள்ளது. இந்த கார் 1482 சிசி திறன் கொண்ட எஞ்ஜின், 1493 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் மற்றம் 1497 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் வேரியண்ட்களில் இந்த கார் உள்ளது. 6 மற்றும் 7 சீட்டர் கொண்டது இந்த கார்.
6.Kia Carnival:
கியா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு Kia Carnival ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 63.91 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 4 லட்சத்து 48 ஆயிரத்து 542 விலை குறைக்க உள்ளனர். 2199 சிசி திறன் கொண்ட 2151 சிசி திறன் கொண்ட டீசல் எஞ்ஜின் மற்றும் 1987 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் இதில் உள்ளது. சொகுசு காரான இந்த கார் 8 ஏர் பேக்குகளை கொண்டது ஆகும்.
இந்தியாவில் டாடா, ஹுண்டாய், மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக கியா நிறுவனம் உள்ளது.





















