எரிபொருள்(பெட்ரோல், டீசல்) மற்றும் சிஎன்ஜி விலைகளின் தொடர்ச்சியான உயர்வு, வாடிக்கையாளர்களை மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பிற மாற்று வழிகளை நாட நிர்பந்தித்துள்ளது. இதனால், மின்சார வாகனங்களின் விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. மே 2026-ல், இதுவரை இல்லாத அதிகபட்சமாக 26,221 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இது, ஏப்ரல் மாதத்தின் 25,250 யூனிட்கள் விற்பனையை விட அதிகம். ஆண்டுக்கு ஆண்டு விற்பனை வியக்கத்தக்க வகையில் 80 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

Continues below advertisement

குறைந்த இயக்கச் செலவு, எரிபொருள் பிரச்னைகள் இல்லாதது மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றால், மின்சார வாகனங்கள் தற்போது கவர்ச்சிகரமானவையாகத் தெரிகின்றன.

முந்திய டாடா - மாருதி, மஹிந்திரா, எம்ஜி நிறுவனங்களுக்கும் வளர்ச்சி

அதிக எண்ணிக்கையிலான மின்சார வாகனங்களைக் கொண்ட டாடா மோட்டார்ஸ், 10,000 யூனிட்டுகளுக்கும் அதிகமான விற்பனையை பதிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மஹிந்திரா மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ, எம்.ஜி நிறுவனங்கள் முறையே 6,000 யூனிட்டுகளுக்கும் அதிகமாகவும், 5,000 யூனிட்டுகளுக்கும் சற்றுக் குறைவாகவும் விற்பனை செய்துள்ளன.

Continues below advertisement

ஒரே ஒரு மின்சார வாகனம் மட்டுமே விற்பனையில் இருந்தபோதிலும், மாருதி சுசுகி நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிகச் சிறந்த மாதத்தை கண்டது. அதன் ஈவிதாரா (eVitara) 1,500 யூனிட்டுகளுக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, வின்ஃபாஸ்ட் (Vinfast) 1,200 யூனிட்டுகளுக்கும் மேல் என்ற நிலையான விற்பனையை பதிவு செய்துள்ளது. BYD, ஹூண்டாய், மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் கியா போன்ற மற்ற நிறுவனங்களின் விற்பனை மூன்று இலக்கங்களில் உள்ளது.

தேவையை அதிகரிக்கும் பல புதிய வெளியீடுகள்

சார்ஜிங் உள்கட்டமைப்பில் இன்னும் பல சிக்கல்கள் இருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுகளும், இத்துறையில் ஏராளமான அறிமுகங்களும், மின்சார வாகனங்களுக்கான தேவையை அதிகரித்துள்ளன.

சமீபத்தில் டொயோட்டா கூட தனது அர்பன் க்ரூஸர் எபெல்லாவுடன், மின்சார வாகனப் பிரிவில் நுழைந்துள்ளது. மேலும் பல கார் தயாரிப்பாளர்களும் விரைவில் இதில் இணைவார்கள்.

பஞ்ச் EV, நெக்ஸான் EV மற்றும் ஹாரியர் EV ஆகியவை தொடர்ந்து அதிகம் விற்பனையாகும் மின்சார வாகனங்களாக இருக்கும் வேளையில், மஹிந்திராவின் XEV 9e மற்றும் 9S மாடல்களுக்கு வலுவான தேவை நிலவுவதோடு, எம்ஜி வின்ட்சர் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காராகவும் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI