ஜிஎஸ்டி வரி குறைப்பு: கடந்த 22 ஆம் தேதி மத்திய அரசு புதிய சீர்திருத்தை கொண்டு வந்ததில் பல துறைகளில் உள்ள பொருள்களின் விலைகள் பெருமளவு குறைந்துள்ளது. ஆட்டோ மொபைல் துறையிலும் இதன் தாக்கம் ஏற்ப்பட்டு கார் மற்றும் பைக் ஆகியவற்றின் விலை பெரியளவில் குறைந்துள்ளது.
முன்னணி கார் நிறுவனமான மாருதி சூசுகி தனது கார்களின் விலையையும் மிகப்பெரிய அளவில் குறைத்துள்ளது. தற்போது நவராத்திரியை முன்னிட்டு பிரபலமான மாடல்களான ஆல்டோ கே10, வேகன்ஆர், ஸ்விஃப்ட், கிராண்ட் விட்டாரா, பலேனோ மற்றும் ஃபிராங்க்ஸ் ஆகியவை இப்போது ஒருங்கிணைந்த பணச் சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகிய தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதில் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை விரிவாக காணலாம்.
பண்டிகை சீசன் 2025 மாருதி சுசுகி Arena சலுகைகள்
| மாடல் | எவ்வளவு விலை குறைப்பு | புதிய விலை | பண்டிகை கால சலுகை |
| S-Presso | 1,29,000 | 3,49,900 | 60,500 |
| Alto K10 | 1,07,600 | 3,69,900 | 70,500 |
| Celerio | 94,100 | 4,69,900 | 75,500 |
| WagonR | 79,600 | 4,98,900 | 75,500 |
| Swift (Petrol & CNG) | 84,600 | 5,78,000 | 78,000 |
| Dzire | 87,700 | 6,25,600 | 3000 |
| Brezza | 1,12,700 | 8,25,900 | 43,000 |
| Ertiga (Petrol & CNG) | 46,400 | 8,80,000 | 10,500 |
| Eeco (Petrol, CNG & Cargo) | 68,000 | 5,18,100 | 50,500 |
பண்டிகை கால நெக்ஸா சலுகை:
மாருதி சூசுகியின் நெக்ஸா வகையில் உள்ள SUV மற்றும் ப்ரீமியம் வகை கார்களின் பிரிவு ஆகும். நெக்ஸா ஷோரூம்களில் பலேனோ (Baleno), கிராண்ட் விட்டாரா (Grand Vitara), ஜிம்னி (Jimny), XL6, இக்னிஸ் (Ignis) போன்ற பிரீமியம் கார்கள் கிடைக்கின்றன, மேலும் இவை மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் புதுமையான அம்சங்களுடன் வழங்கப்படுகின்றன. இந்த பண்டிகை கால சலுகையில் அதிகப்பட்சமாக 2 லட்சம் வரை சலுகை வழங்கப்படவுள்ளது.
கிரண்ட் விட்டாரா:
எஞ்சின் & செயல்திறன்
மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா இரண்டு வகையான எஞ்சின் விருப்பங்களுடன் வருகிறது – 1.5 லிட்டர் K15C பெட்ரோல் மைல்ட் ஹைப்ரிட் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எஞ்சின். மைல்ட் ஹைப்ரிட் 103 bhp பவரும் 136 Nm டார்க்யூமும் வழங்க, ஸ்ட்ராங் ஹைப்ரிட் 115 bhp கம்பைன்ட் பவர் அவுட்புட் வழங்குகிறது.
கியர்பாக்ஸ் & டிரைவ் ஆப்ஷன்கள்
கியர்பாக்ஸ் விருப்பங்களில் 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் மற்றும் e-CVT (ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல்) உள்ளன. டிரைவ் விருப்பங்களில் Front Wheel Drive (FWD) மற்றும் All Wheel Drive (AWD) ஆகிய இரண்டும் கிடைக்கின்றன.
எவ்வளவு மைலேஜ்
மைலேஜை பார்க்கையில், மைல்ட் ஹைப்ரிட் மாடல் சுமார் 20-21 kmpl வரை, ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல் சுமார் 27 kmpl வரை வழங்குகிறது. இது தனது பிரிவில் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் காராக திகழ்கிறது.
தொழில்நுட்ப வசதிகள் & பாதுகாப்பு அம்சங்கள்
கிராண்ட் விட்டாராவில் 9 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வைர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ / ஆப்பிள் கார்ப்ளே, ஹெட்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் போன்ற பல நவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு தரத்தில், கிராண்ட் விட்டாராவில் 6 ஏர்பேக்குகள், ABS with EBD, ESP (Electronic Stability Program), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ISOFIX குழந்தைகள் சீட் மவுண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.
| மாடல் | தள்ளுபடி |
| Ignis | AGS பதிப்புகளில் ரூ.62,100 வரை தள்ளுபடி + ரூ.50,000 வரை ஸ்கிராட்ச் கார்டு மூலம் வெல்லலாம். |
| Baleno | ரூ.70,000 வரை அல்லது ரொக்கம் + ரூ.55,000 வரை மதிப்புள்ள ரீகல் கிட். |
| Fronx | சிறிய டர்போ வகைகளுக்கு ரூ.70,000 வரை தள்ளுபடி (அல்லது ரூ.40,000 + வேலாசிட்டி கிட்) |
| Grand Vitara | ப்ரீ மைனர் மற்றும் AWD மற்றும் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் டிரிம்களில் ரூ.1.6–2 லட்சம் சலுகைகள், கூடுதலாக ஐந்து வருட warranty மற்றும் விருப்பமான டொமினியன் கிட். |
| XL6 | ரூ.25,000 (பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி) + ஸ்கிராட்ச் கார்டு தகுதிக்கான பிளாட் சலுகைகள். |
| Jimny | ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி (ஆல்பா வகைக்கு) |
| Invicto | ரூ.1.40 லட்சம் வரை (ஆல்பா வகைக்கு) |
Car loan Information:
Calculate Car Loan EMI